யாப்பதிகாரம்421முத்துவீரியம்

(வ-று.)

அரும்பிய கொங்கை அவ்வளை அமைத்தோள்

மேற்கதுவாய்மோனை

வில்லே நுதலே வேற்கண் கயலே

மேற்கது வாயியைபு

என்னையும் இடுக்கண் துன்னுவித் தின்னடை

மேற்கதுவாயெதுகை

வெள்வளைத் தோளுஞ் சேயரிக் கருங்கணும்

மேற்கதுவாய் முரண்

தேஎம் புனலிடைச் சேஎர்பாஅல்

மேற்கதுவாயளபு (37)

கீழ்க்கதுவாய்த் தொடை

899. ஈற்றயற் சீரொழித் தெல்லாம் தொடுப்பது
     கீழ்க்கது வாயின் கிழமைய தாகும்.

என்பது, ஈற்றயற் சீர்க்கணின்றி ஒழிந்த மூன்று சீர்க்கண்ணு மோனை முதலாயின
ஐந்தும் வருவது கீழ்க்கதுவாய்த்தொடை.

(வ-று.)

அவிர்மதி அனைய திருநுதல் அரிவை

கீழ்க்கதுவாய் மோனை

பல்லே தளவம் பாலே சொல்லே

கீழ்க்கதுவாயியைபு

அன்ன மென்பெடை போலப் பன்மலர்

கீழ்க்கதுவா யெதுகை

இருக்கையு நிலையு மேந்தெழி லியக்கமும்

கீழ்க்கதுவாய்முரண்

மீஇ னாஅர்ந் துகளுஞ் சீஇர்

கீழ்க்கது வாயளபு (38)

முற்றுத்தொடை

900. முழுவது மியைவது முற்றெனப் படுமே.