யாப்பதிகாரம்427முத்துவீரியம்

(வ-று.)

வந்துழிக் காண்க. (10)

வெண்பாவினிறுதிச்சீர் அலகிடுமாறு

911. நேர்நா ணிரைமலர் தேமாக் காசு
    புளிமாப் பிறப்பெனப் புகலப் படுமே.

என்பது, நேரசையிறின் நாளெனவும், நிரையசையிறின் மலரெனவும், தேமாவிறின்
காசெனவும், புளிமாவிறின் பிறப்பெனவும் பெயர்பெறும்.

(வ-று.)

பாலொடு தேன்கலந் தற்றே பனிமொழி
வாலெயி றூறிய நீர். (குறள்-1121)

நாள்.

கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன்
நற்றா டொழாஅ ரெனின். (குறள்-2)

மலர்.

தேன்றிற் புகழொடு தோன்றுக வஃதிலார்
தோன்றலிற் றோன்றாமை நன்று. (குறள்-236)

காசு.

அகர முதல வெழுத்தெல்லா மாதி
பகவன் முதற்றே யுலகு. (குறள்-1)

பிறப்பு. (11)

வெண்பாவிற்குரிய ஓசை

912. செப்ப லோசையிற் சிறக்கும்வெண் பாவே.

என்பது, வெண்பாச் செப்பலோசையைப் பெறும். (12)

செப்பலோசையின் வகை

913. அதுதான்,
     ஏந்திசை தூங்கிசை யொழுகிசை யெனவொரு
     மூன்று வகைப்படு மொழியுங் காலே.