யாப்பதிகாரம் | 435 | முத்துவீரியம் |
ஏந்திசை யகவல்
931. நேரொன் றாசிரி யத்தளை
யால்வரல்
ஏந்திசை யகவ லெனப்படு மெனலே.
என்பது, முற்கூறியவற்றுள்
நேரொன்றாசிரியத் தளையான் வருவது ஏந்திசையகவ
லோசையாகும்.
(வ-று.)
போது சாந்தம் பொற்ப
வேந்தி
ஆதி நாதற் சேர்வோர்
சோதி வானந் துன்னு வோரே. (31)
தூங்கிசை யகவல்
932. நிரையொன் றாசிரி யத்தளை
யால்வரல்
தூங்கிசை யகவ லெனச்சொலப் படுமே.
என்பது, நிரையொன்றாசிரியத்
தளையான் வருவது தூங்கிசை யகவலோசை யாகும்.
(வ-று.)
அணிநிழல் அசோகமர்ந் தருணெறி
நடாத்திய
மணிதிக ழவிரொளி வரதனைப்
பணிபவர் பவநனி பரிசறுப் பவரே. (32)
ஒழுகிசை யகவல்
933. இவ்விரு தளையும் பிறவு
மயங்கி
வருவ தொழுகிசை யாம்வழுத் திடினே.
என்பது, நேரொன்றிய
வகவற்றளையும் நிரையொன்றிய வகவற்றளையும்
பிற
தளைகளும் விரவிவருவது ஒழுகிசையகவ
லோசையாகும்.
(வ-று.)
குன்றக் குறவன் காதன்
மடமகள்
வரையர மகளிரைப் புரையுஞ் சாயலள்
ஐய ளரும்பிய முலையள்
செய்ய வாயினள் மார்பினள்
சுணங்கே. (33)
|