எழுத்ததிகாரம்45முத்துவீரியம்

5. புணரியல்

புணர்ப்பு இன்னதென்பது

160. நிலைவரு மொழியொடு நேர்வது புணர்ப்பே.

(இ-ள்.) நிலைமொழி வருமொழியோ டொன்றுபட்டுப் புணருவது புணர்ச்சியாகு
மெனவறிக.

(வ-று.) விளகுறிது, ஒளிமணி, கலைமதி, சிவகாமி, பாலாழி, மதகளிறு, புதுமதி
எனவரும். பிறவுமன்ன. (1)

அதன் வகை

161. அதுதான்,
    இயல்பு விகார மெனவிரு பாலன.

(இ-ள்.) அப்புணர்ச்சி இயல்புப்புணர்ச்சி யெனவும், விகாரப் புணர்ச்சியெனவு
மிருபகுதிய வாகுமென்க. (2)

இயல்பு இன்னதென்பது

162. விகார மனைத்து மேவல தியல்பே.1

(இ-ள்.) மேல்வரும் விகாரவகையெல்லாம் அடையாதது இயல்புப் புணர்ச்சியாகும்.

(வ-று.) கால் + ஆழி = காலாழி. (3)

விகாரம் இன்னது என்பது

163. ஆக்கந் திரிபழி வாகும் விகாரம்.

(இ-ள்.) விகாரம் தோன்றலும், திரிதலும், கெடுதலுமாம்.

(வ-று.) அவரைக்காய், பஃறலை, மரவேர். (4)

மரூஉவும் புணர்தற்குரியது

164. 2மருவின் றொகுதியு மயங்கியன் மொழியும்
      உரியவை யுளவே புணர்நிலைச் சுட்டே.

1. நன் - உயிரீற் - 3.

2. தொல் - எழுத்து - புணரி. 9.