யாப்பதிகாரம் | 456 | முத்துவீரியம் |
கூன்
982. அடிமுதற் கட்பாப் பொருளைத்
தழுவித்
தனியே நிற்பது கூனா மக்கூன்
வஞ்சியு ளிடைகடை முதலினும் வருமே.
என்பது, அடிமுதற்கட் பாவினது
பொருளைத் தழுவித் தனியே நிற்பது கூனாம்.
அக்கூன் வஞ்சிப்பா முதலிடை கடையாகிய
மூவிடத்தினும் வரப்பெறும்.
(வ-று.)
உதுக்காண், சுரந்தானா வண்கைச்
சுவணமாப் பூதன்
புரந்தானாப் பல்புகழைப் பாடி - யிரந்தார்மாட்
டின்மை யகல்வது போல விருணீங்க
மின்னு மளிதேர் மழை.
வெண்பா முதல்.
அவரே, கேடில் விழுப்பொரு டருமார்
பாசிலை
வாடா வள்ளியங் காடிறந் தோரே. (குறுந். 216)
அகவல் முதல்.
உலகினுள், பெருந்தகையார்
பெருந்தகைமை பிறழாவே பிறழினும்
இருந்தகைய விறுவரைமே லெரிபோலச்
சுடர்விடுமே,
கலிப்பா முதல்.
உலகே, முற்கொடுத்தார்
பிற்கொளவும்,
வஞ்சிப்பா முதல்
மாவழங்கலின் மயக்குற்றன, வழி.
வஞ்சிப்பா கடை
கலங்கலா, லித்துறை, கலக்குற்றன.
வஞ்சிப்பா நடு. (21)
வல்லிசை வண்ணம்
983. எதுகை முதலடி யெல்லாம்
வல்லின
மிகுவன வல்லிசை யாம்விளம்
பிடினே.
என்பது, எதுகை முதலடி யெல்லாம்
வல்லெழுத்து மிக்கு வருவன வல்லிசை
வண்ணமாகும்.
(22)
|