யாப்பதிகாரம்458முத்துவீரியம்

ஏந்திசை வண்ணம்

990. நேரிறு வுரிச்சீர் மிகவந் தேந்திய
     ஓசையின் வருவன வேந்திசை யாகும்.

என்பது, நேரீற்ற வுரிச்சீர் மிகவந்து ஏந்திய வோசையின் வருவன ஏந்திசை
வண்ணமாகும். (29)

தூங்கிசை வண்ணம்

991. நிரையிறு வுரிச்சீர் மிக்குத் தூங்கிய
     ஓசையின் வருவன தூங்கிசை யாகும்.

என்பது, நிரையீற்ற வுரிச்சீர் மிகவந்து தூங்கிய வோசையின் வருவன தூங்கிசை
வண்ணமாகும். (30)

வகைப்பு வண்ணம்

992. மறுத்தறுத் தியல்வன வகைப்பா கும்மே.

என்பது, மறுத்து, அறுத்து, வருவன வகைப்பு வண்ணமாகும். (31)

புறப்பாட்டு வண்ணம்

993. முடிந்தது போல முடியாது வருவன
     புறப்பாட் டென்மனார் புலமை யோரே.

என்பது, முடிந்ததுபோல முடியாது வருவன புறப்பாட்டு வண்ணமாகும். (32)

அகப்பாட்டு வண்ணம்

994. முடியா ததுபோன் முடிந்து வருவன
     அகப்பாட் டென்மனா ரறிந்திசி னோரே.

என்பது, முடியாததுபோல முடிந்து வருவன அகப்பாட்டு வண்ணமாகும். (33)

அளபு வண்ணம்

995. அடிதொறு மளபெடை யெதுகை யாக
     வருவன வளபாம் வகுக்குங் காலே.