யாப்பதிகாரம் | 459 | முத்துவீரியம் |
என்பது, அடிதொறும் அளபெடை
யெதுகையாக வருவன, அளபு வண்ணமாகும். (34)
பாவண்ணம்
996. நூற்பா லுரைத்து வருவன பாவே.
என்பது, நூற்பாற்கூறி வருவன
பாவண்ணமாகும். (35)
நலிபு வண்ணம்
997. அடிதொறு மெதுகை யாக
வாய்தங்
கொடுவர னலிபாங் குறிக்குங் காலே.
என்பது, அடிதொறுமாய்த
மெதுகையாகக் கொண்டு வருவன நலிபு வண்ணமாகும்.
(36)
தரவு வண்ணம்
998. ஓரடிக் கோரடி மத்தியில்
விட்டடி
எதுகை யொன்றி யியல்வன தரவே.
என்பது, ஓரடிக்கோரடி
யிடையில்விட்டு, அடியெதுகையுற்று வருவன தரவு
வண்ணமாகும். (37)
ஒரூஉ வண்ணம்
999. அடிதொறு மொன்றாத்
தொடையொடு
வருவன
ஒரூஉ வெனப்பெய ருரைக்கப் படுமே.
என்பது, அடிதோறும், ஒன்றாத
தொடையொடு வருவன ஒரூஉ வண்ணமாகும். (38)
குறுஞ்சீர் வண்ணம்
1000. குற்றெழுத் தியைந்து வருவன
குறுஞ்சீர்
ஆகு மென்மனா ரறிந்தி சினோரே.
என்பது, குற்றெழுத்தியைந்து
வருவன, குறுஞ்சீர் வண்ணமாகும். (39)
|