யாப்பதிகாரம் | 462 | முத்துவீரியம் |
என்பது, யாப்பினிலை பிறழ்ந்து
வருவன யாப்பானந்தம்.
(வ-று.)
மனுக்கு முதல்வனிதி வாழ்வான்
சிலைரா
மனுக்கு நிகர் யாரைவகுப் பாம், என
யாப்பானந்தம். (48)
அணியானந்தம்
1010. அணிநிலை பிறழ்ந்து வருவன
வணியா
னந்தமா மென நவிலப் படுமே.
என்பது, அலங்கார நிலைபிறழ்ந்து
வருவன அணியானந்தம்.
(வ-று.)
இந்திரனே போலு மிளஞ்சாத்தன்
சாத்தற்கு
மந்திரமே போன்றிலங்கு
மல்லாகம்.
இதனுள், சாத்தனாகிய கீழ்மகனை
அரசனைப்போல் உவமித்தது அணியானந்தம். (49)
நான்கு பாவினுக்கும் நாள், கிரகம்
முதலியன உள என்பது
1011. வெண்பா முதல்வஞ் சிப்பா
விறுதி
நான்குபா வினுக்கு நாளுங் கிரகமும்
நிலனுங் குலனு நிறமு மிராசியும்
ஆகிய விருமூன் றிலக்கணப் பகுதி
குறித்தார் முற்றுணர் குரவ ரென்ப.
என்பது, வெண்பா, அகவற்பா,
கலிப்பா, வஞ்சிப்பா நான்கிற்கும் நாளும், கிரகமும்,
நிலனும், குலனும், நிறமும், இராசியும்
ஆகிய ஆறிலக்கணப் பகுதியைப் புலவர் குறித்தார்.
(50)
வெண்பாவிற்குரிய நாள், நிறம் முதலியன
1012. அவற்றுள்
வெண்பா வெண்ணிறம் விருச்சிகங்
கார்த்திகை
முதலிய வெழுநாண் முற்படு விருச்சிக
மீன மிராசி விப்பிர குலமதி
|