யாப்பதிகாரம் | 466 | முத்துவீரியம் |
என்பது, ஏது, மேற்கோள்,
எடுத்துக் காண்பித்து, தன் கோட்பாட்டை நிறுத்திப்,
பிறன்கோட்பாட்டை மறுப்பவன் வாதியாகும். (63)
வாக்கி
1025. அறம்பொரு ளின்பம்வீ டாகிய
நான்கும்
கேட்போர் வேட்ப வினியன
கிளத்தும்
ஆற்ற லுடையோன் வாக்கியா மெனலே.
என்பது, அறம், பொருள், இன்பம்,
வீடு ஆகிய நாற்பொருட் பயனையும், கேட்போர்
விரும்ப இனியன கூறும் ஆற்றலுடையான்,
வாக்கியாகும். (64)
பாக்களுக்குரிய பத்துவகைப்
பொருத்தம்
1026. துகளறு மங்கலஞ் சொல்லுட
னெழுத்து
தானம் பாலுணாச் சாதி நாள்கதி
கணமொரு பத்துமுற் காணுவ
பொருத்தம்.
என்பது, மங்கலப் பொருத்தம்,
சொற்பொருத்தம், எழுத்துப் பொருத்தம்,
தானப்பொருத்தம், பாற்பொருத்தம், உண்டிப்
பொருத்தம், வருணப் பொருத்தம்,
நாட்பொருத்தம், கதிப்பொருத்தம், கணப்பொருத்தம்
எனப் பொருத்தம் பத்துவகைப்படும்.
(65)
மங்கலப் பொருத்தம்
1027. அவற்றுள்,
மங்கலங் கார்புயன் மாமணி வாருதி
ஆரண முலகல ரமுதந் தேர்வயல்
திங்கள்பொன் னெழுத்துத்
திவாகரன் கரிபரி
கங்கை நிலந்திருக் காட்டிய
பிறவும்
ஆகு மென்மனா ரறிந்திசி னோரே.
என்பது, முற்கூறியவற்றுள்,
மங்கலப் பொருத்தமாவன, கார், புயல், மா, மணி
கடல், ஆரணம், உலகு, பூ, அமுதம், தேர், வயல்,
திங்கள், பொன், எழுத்து, சூரியன்,
யானை, குதிரை, கங்கை, நிலம், திரு, இவை முதலியன
பிறவுமாம். (66)
|