யாப்பதிகாரம்467முத்துவீரியம்

முதற் சீர் மொழிக் காகாதன

1028. சீர்நனி சிதைதல் சிறப்பின்றாய் நிற்றல்
      ஈறு திரித லிரும்பொரு ளின்மை
      பலபொருள் பயத்தல் முதலிய பிறவு
      முதற்சீர் மொழிக்கா காவென மொழிப.

என்பது, சீர்சிதைந்து நிற்றல், சிறப்பில்லாமை, ஈறுதிரிதல், பொருளின்மை,
பலபொருடருதல் இவை போல்வன பிறவும் முதற்சீர் மொழிக்குக் குற்றமாகும். (67)

முதற்சீர்க்குரிய எழுத்து வரையறை

1029. ஐந்தொடு மூன்றே ழாறொடு மூன்றும்
      ஆகுநா லாறெட் டெழுத்தா காவே.

என்பது, ஐந்தெழுத்து, மூன்றெழுத்து, ஏழெழுத்து, ஒன்பதெழுத்து, முதற்
சீர்க்காகும்; நாலெழுத்து, ஆறெழுத்து, எட்டெழுத்து, ஆகாவாம். (68)

முதற்சீர்க்காகும் எழுத்துக்கள்

1030. அ ஆ இ ஈ ஐயும் உ ஊ
      ஒளவும் எ ஏ ஒ ஓ வென்றிவை
      பாலன் குமார னிராசன் மூப்பு
      மரண முறையே யைந்து மெண்ணுக
      மூப்பு மரணமு முதற்சீர்க் காகா.

என்பது, அ, ஆ, பாலன்; இ, ஈ, ஐ குமரன்; உ, ஊ, ஒள, இராசன்; எ, ஏ, மூப்பு; ஒ,
ஓ மரணம். இவற்றில் பாலன், குமரன், இராசன், ஆம்; மூப்பு, மரணம் முதற்சீர்க்காகாவாம்.
(69)

எழுத்துக்களுக்குரிய பாற்பகுப்பு

1031. குறிலாண் நெடில்பெண் ணாந்தனி நிலைமெய்
     அலியாம் பெண்ணினோ டாண்பாற் புணர்ச்சிக்
     கவ்வவ் வெழுத்தா மயங்கினாம் வழுவே.

என்பது, குற்றெழுத்தெல்லாம், ஆண்பால்; நெட்டெழுத்தெல்லாம் பெண்பால்;
ஆய்தமும் மெய்களும் பேடு! பெண்பாற்குப்