யாப்பதிகாரம் | 476 | முத்துவீரியம் |
என்பது, வெண்பாமுதலாக வேறுபட்ட
பாவும் பாவினமுமாக வொன்பது
செய்யுளந்தாதித்துப் பாடுவது
நவமணிமாலையாகும். (90)
நான்மணிமாலை
1052. அந்தா தித்து வெண்பாக்
கலித்துறை
விருத்தமு மகவலும் விரவி நாற்பது
நவில்வது நான்மணி மாலை யாகும்.
என்பது, வெண்பாவும்,
கலித்துறையும், விருத்தமும், அகவலும் அந்தாதித்து,
நாற்பது
பாடுவது நான்மணிமாலையாகும். (91)
நாமமாலை
1053. அகவ லடிகலி யடியு
மயங்கிய
வஞ்சியாற் புருடனை வாழ்த்திப்
புகழ்வது
நாம மாலையா நாடுங் காலே.
என்பது, அகவலடியும், கலியடியும்
வந்து மயங்கிய வஞ்சிப் பாவால் ஆண்மகனைப்
புகழ்ந்து பாடுவது நாமமாலையாகும். (92)
பலசந்தமாலை
1054. பப்பத் தாகப் பலசந்
தத்தொடு
வீரைம் பான்பாட் டியல்வ ததுபல
சந்த மாலையாஞ் சாற்றுங் காலே.
என்பது, பத்துப் பத்துச்
செய்யுள், வெவ்வேறுசந்தமாக நூறு செய்யுட் கூறுவது
பலசந்த மாலையாகும். (93)
பன்மணிமாலை
1055. முற்கூ றியகலம்
பகத்துள்
வருமொரு
போகு மம்மனை யூசலும் போக்கி
ஏனைய வுறுப்புக ளெல்லா
மமையப்
பாடுவ ததுதான் பன்மணி மாலை.
என்பது, முற்கூறிய கலம்பகத்துள்,
ஒருபோதும் அம்மனையும் ஊசலுமின்றி ஏனைய
வுறுப்புக்களெல்லாம் அமையப் பாடுவது பன்மணி
மாலையாகும். (94)
|