யாப்பதிகாரம் | 492 | முத்துவீரியம் |
என்பது, கலிவெண்பாவால் பெண்கள்
தங் கையிற் கண்ட இளமைத்
தன்மையையுடைய
குழமகனைப் புகழ்ந்து கூறுவது குழமகனாகும். (153)
தாண்டகம்
1115. இருபத் தேழெழுத் தாதி யாக
உயர்ந்த வெழுத்தடி யினவா யெழுத்துங்
குருவு மிலகுவு மொத்து வந்தன
அளவியற் றாண்டக மெனவு மக்கரம்
ஒவ்வாது மெழுத்தல கொவ்வாதும்
வந்தன
அளவழித் தாண்டக மெனவும் பெயர்பெறும்.
என்பது, இருபத்தே ழெழுத்து
முதலாக வுயர்ந்த வெழுத்தடியினவாய், எழுத்துங்
குருவும் இலகுவு மொத்துவந்தன அளவியற்றாண்டக மெனவும்,
எழுத்தொவ்வாதும்
எழுத்தல கொவ்வாதும் வந்தன
அளவழித் தாண்டகமெனவும் பெயர் பெறும். (154)
பதிகம்
1116. கோதிலோர் பொருளைக்
குறித்தை யிரண்டு
பாவெடுத் துரைப்பது பதிக மாகும்.
என்பது, ஒருபொருளைக் குறித்துப்
பத்துச் செய்யுளாகக் கூறுவது பதிகமாகும். (155)
சதகம்
1117. அகப்பொரு ளொன்றன்மே
லாதல்
புறப்பொருள்
ஒன்றன்மே லாதல் கற்பித் தொருநூறு
செய்யு ளுரைப்பது சதகமா மென்ப.
என்பது, அகப்பொரு
ளொன்றன் மேலாதல், புறப்பொரு ளொன்றன்மேலாதல்
கற்பித்து, நூறுசெய்யுட் கூறுவது சதகமாகும். (156)
செவியறிவுறூஉ
1118. பொங்குத லின்றிப் புரையோர்
நாப்பண்
நவிறல்கட னெனவவை யடக்கியற்
பொருளு
மருட்பாவா லுரைப்பது செவியறி
வுறூஉவே.
|