அணியதிகாரம் | 519 | முத்துவீரியம் |
(வ-று.)
வேலுங் கருவிளையு மென்மானுங்
காவியுஞ்
சேலும் வடுவகிருஞ் செஞ்சரமும்-போலுமால்
தேமருவி யுண்டு சிறைவண் டறைகூந்தற்
காமருவு பூங்கோதை கண். (தண்டி-மேற்)
(17)
விகாரவுவமை
1171. விகாரமோ ருவமையை
விகாரப் படுத்திப்
பொருளை யுவமித்துப் போதர லாகும்.
என்பது, ஓருவமையை
விகாரப்படுத்திப் பொருளை யுவமித்தொழுகல்
விகாரவுவமை.
(வ-று.)
சீதமதியி னொளியுஞ் செழுங்
கமலப்
போதின் புதுமலர்ச்சி யுங்கொண்டு-வேதாத்தன்
கைம்மலரா னன்றிக் கருத்தால் வகுத்தமைத்தான்
மொய்ம்மலர்ப்பூங் கோதை முகம்.
(தண்டி-மேற்) (18)
மோகவுவமை
1172. விழுமிய வொருபொருண்
மேலெழும் வேட்கை
வருமன மயக்கம் புலப்பட வகுத்து
மொழிவது மோக வுவமை யாகும்.
என்பது, ஒருபொருண்மேற்
றோன்றிய இச்சையினாலே வரப்பட்ட மன மயக்கம்
வெளிப்பட வகுத்துக் கூறல் மோகவுவமை.
(வ-று.)
கயல்போலு மென்றுநின்
கண்பழிப்பல் கண்ணின்
செயல்போற் பிறழுந் திறத்தாற்-கயல்புகழ்வல்
ஆரத்தா னோம்மருங்கு லந்தரள வாண்முறுவல்
ஈரத்தா லுள்வெதும்பும் யான்.
(தண்டி-மேற்) (19)
கூடாவுவமை
1173. கூடா ததனைக் கூடுவ
தாகக்
கொண்டத னொன்றற் குவமை யாக்கி
உரைப்பது கூடா வுவமை யாகும்.
|