அணியதிகாரம் | 521 | முத்துவீரியம் |
என்பது, ஆகியவென்னு
மாட்டேற்றுச்சொல்லை மறைத்துக் கூறல்
தொகையுருவகம்.
(வ-று.)
அங்கை மலரு மடித்தளிருங்
கண்வண்டுங்
கொங்கை முகிழுஞ் குழற்காருந்-தங்கியதோர்
மாதர்க் கொடியுளதா னண்பா வதற்கெழுந்த
காதற் குளதோ கரை. (23)
விரி யுருவகம்
1177. விரிந்து நிற்பது விரியெனப்
படுமே.
என்பது, ஆகியவென்னு
மாட்டேற்றுச் சொல் வெளிப்பட்டு நிற்றல்
விரி யுருவகம்.
(வ-று.)
கொங்கை முகையாக மென்மருங்குல்
கொம்பாக
அங்கை மலரா வடித்தளிராத்-திங்கள்
அளிநின்ற மூர லணங்கா மெனக்கு
வெளிநின்ற வேனிற் றிரு. (24)
தொகைவிரி யுருவகம்
1178. தொக்கும் விரிந்து நிற்பது
தொகைவிரி.
என்பது, ஆகியவென்னு
மாட்டேற்றுச் சொல் மறைந்தும் வெளிப்பட்டும்
நிற்றல்
தொகைவிரி யுருவகம்.
(வ-று.)
வையந் தகழியா வார்கடலே
நெய்யாக
வெய்ய கதிரோன் விளக்காகச்-செய்ய
சுடராழி யானடிக்கே சூட்டுவன்
சொன்மாலை
இடராழி நீங்குகவே யென்று. (25)
இயை புருவகம்
1179. உருவகம் பலபொரு ளையுமுஞற்
றுங்கால்
தம்மு ளியைபுடைத் தாக வுருவகஞ்
செய்வ தியைபெனச் செப்பினர்
புலவர்.
|