அணியதிகாரம்529முத்துவீரியம்

என்பது, இழிவாகிய பொருளைக் கொடுத்து உயர்வாகிய பொருளை வாங்கல்
மாற்றுநிலை.

(வ-று.)

சடாயு கிழவுடம்பைத் தான்கொடுத்துப் பெற்றான்
கெடாததொரு கீர்த்தி யுடம்பு. (47)

ஒழித்துக் காட்டணி

1201. ஒருபொரு ளோரிடத் திலையென நீக்கி
      வேறோ ரிடத்துள தெனவிடுத் தியம்பல்
      ஒழித்துக் காட்டென வுரைக்கப் படுமே.

என்பது, ஒரு பொருளொருவிடத்து இல்லையென்று நீக்கி வேறோரிடத் துண்டென்று
கூறல் ஒழித்துக்காட்டு.

(வ-று.)

சிறைபடுவ புட்குலமே யன்றிநின் றேயத்
திறைவமக் கட்கு ளிலை. (48)

கூட்டவணி

1202. இகலின் மையினா லேயொரு காலங்
      கூடத் தகும்பொருட் குக்குழாங் கூறல்
      கூட்ட மெனப்பெயர் குறிக்கப் படுமே.

என்பது, பகையில்லாமையா லொருகாலஞ் சேரத்தகுந்த பொருள்களுக்குக்
கூட்டத்தைக் கூறல் கூட்டவணி.

(வ-று.)

நின்சீ ருருவும் வெளிப்படுத னோக்கி நோக்கி வெய்துயிர்க்கும்
என்பூ டுருக விளமுலைமேற் புல்லு முனிந்தா யெனவருந்தும்
அன்போ டூட றீர்த்தனன்போ னகைக்கு மகன்றா யெனவெளியிற்
பின்போ தருநல் லுணர்விழந்த பித்தர் போலப் பேதுறுமால். (49)

எளிதில் முடிபணி

1203. ஆற்ற வொருவனா ரம்பித் தவையொரு
      காரண வுதவியாற் கைப்பட லதுதான்
      எளிதின் முடிபென வியம்பப் படுமே.