அணியதிகாரம்535முத்துவீரியம்

தீவாய் நெடுவாடை வந்தாற் செயலறியேன்
போவா யொழிவாய் பொருட்கு. (தண்டி-மேற்)

விலக்கணி வன்சொல், வாழ்த்து முதலியன பலவுள; அவை பெரும்
பயனின்மையாற் கூறாதொழிந்தனம்; வந்துழிக் காண்க. (63)

வேற்றுப் பொருள்வைப்பணி

1217. ஆதியி லொருபொரு ளாரம் பித்தது
     முடித்தற் குப்பின் னொருசொன் மொழிவது
     வேற்றுப் பொருள்வைப் பாமென மொழிப.

என்பது, முன்னொரு பொருளைத் தொடங்கி, அப்பொருண் முடித்தற்குப் பின்னொரு
பொருளைக் கூறல் வேற்றுப் பொருள் வைப்பணி.

(வ-று.)

புறந்தந் திருளிரியப் பொன்னேமி யுய்த்துச்
சிறந்த வொளிவளர்க்குந் தேரோன்-மறைந்தான்
புறவாழி சூழ்ந்த புவனத்தே தோன்றி 
இறவாது நிற்கின்றார் யார். (தண்டி-மேற்) (64)

முரணித் தோன்றல்

1218. மாறு படும்பொருள் வைத்து முடிப்பது
      முரணிற் றோன்றலா மொழியுங் காலே.

என்பது, மாறுபடும் பொருளைக்கூட்டி முடிப்பது முரணித் தோன்றல் வேற்றுப்
பொருள்வைப்பு.

(வ-று.)

வெய்ய குரற்றோன்றி வெஞ்சினவே றுட்கொளினும்
பெய்யு மழைமுகிலைப் பேணுவரால்-வையத்
திருள்பொழியுங் குற்றம் பலவெனினும் யார்க்கும்
பொருள்பொழிவார் மேற்றே புகழ். (தண்டி-மேற்) (65)

பிறபொருள் வைப்பு

1219. பொருந்தாப் பொருளைப் பொருந்த வைப்பது
     மருந்தாப் பிறபொருள் வைப்பெனப் படுமே