அணியதிகாரம் | 545 | முத்துவீரியம் |
பொருகாலு மூடிப் புடைபெயருங் காலும்
இருகாலு மொக்கு மிவர்க்கு.
(தண்டி-மேற்)
அவலம்:
கழல்சேர்ந்த கால்விடலை
காதலிமெய் தீண்டும்
அழல்சேர்ந்து தன்னெஞ் சயர்ந்தான்-குழல்சேர்ந்த
தாமந் தரியா தசையுந் தளிர்மேனி
ஈமந் தரிக்குமோ வென்று.
(தண்டி-மேற்)
உருத்திரம்:
கைபிசையா வாய்மடியாக் கண்சிவவா
வெய்துயிரா
மெய்குலையா வேரா வெகுண்டெழுந்தான்-வெய்யபோர்த்
தார்வேய்ந்த தோளான் மகளைத் தருகென்று
போர்வேந்தன் றூதிசைத்த போது. (தண்டி-மேற்)
நகை:
நாண்போலுந் தன்மனைக்குத்
தான்சேற லிந்நின்ற
பாண்போலும் வெவ்வழலிற் பாய்வதூஉங்-காண்டோழி
கைத்தலங்கண் ணாக்களவு காண்பா
னொருவன்
பொய்த்தலைமுன் னீட்டியற்றும் போந்து. (தண்டி-மேற்)
தன்மேம்பாட்டுரையணி
1243. தன்னைப் புகழ்வது தன்மேம்
பாட்டுரை.
என்பது, தன்னைத்தானே புகழ்வது
தன்மேம்பாட்டுரையணி.
(வ-று.)
எஞ்சினா ரில்லை யெனக்கெதிரா
வின்னுயிர்கொண்
டஞ்சினா ரஞ்சாது போயகல்க-வெஞ்சமத்துப்
பேரா தவராகத் தன்றிப் பிறர்முதுகிற்
சாராவென் கையிற் சரம்.
(தண்டி-மேற்) (90)
பரியாயவணி
1244. தான்கரு தியபொரு
டனைக்கூ றாதப்
பொருள்புலப் படப்பிறி தொன்றனைப் புகல்வது
பரியாய மெனப்பெயர் பகரப்
படுமே.
என்பது, தானெண்ணிய பொருளைச்
சொல்லாமல் அப்பொருள் தோன்ற வேறொரு
பொருளைக் கூறல் பரியாயவணி.
|