அணியதிகாரம் | 554 | முத்துவீரியம் |
யுதாரங் காந்திமற் றொன்பது
மொன்றும்
வைதருப் பந்நெறி யாம்வழுத்
திடினே.
என்பது, சமாதியும், சிலீட்டமும்,
ஆலேசமும், சமதையும், பொருட்டெளியும்,
இன்பமும், புலனும், சுகுமாரதையும், உதாரமும், காந்தியும்
ஆகிய பத்து வைதருப்பநெறி.
(11)
சமாதி
1269. அவற்றுள்,
ஒன்றன் பாலுண் டாகிய குணமற்
றொன்றன் பாலுள வாக வுரைப்பது
சமாதி யெனப்பெயர் சாற்றப்
படுமே.
என்பது, முற்கூறியவற்றுள், ஒரு
பொருளின்க ணுளவாயிருக்கிற குணம் வேறொரு
பொருளின்க ணுளவாகக்கூறல் சமாதிச் செய்யுள்.
(வ-று.)
காலை யரும்பிப்
பகலெல்லாம் போதாகி
மாலை மலருமிந் நோய். (குறள்-1227)
(12)
சிலீட்டம்
1270. சிலீட்டஞ் சொற்செறி வுடைய
தாகும்.
என்பது, சொற்களடர்த்தியுடையது
சிலீட்டச் செய்யுள்.
(வ-று.)
பற்றுக பற்றற்றான் பற்றினை
யப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு. (குறள்-350) (13)
ஆலேசம்
1271. ஆலே சந்தொகை யதிகமா குதலே.
என்பது, தொகைச்சொற்கள்
அதிகமாகவரல் ஆலேசச்செய்யுள்.
(வ-று.)
சுவையொளி யூறோசை நாற்றமென்
றைந்தின்
வகைதெரிவான் கட்டே யுலகு. (குறள்-27)
(14)
|