எழுத்ததிகாரம்60முத்துவீரியம்

(வ-று.) காலேகாணி தொடியேகஃசு, கலனேதூணி எனவரும். (43)

எண், நிறை அளவின்கண் அரைவருதல்

203. அரைவரின் ஏயகன் றோடு மற்றே.

(இ-ள்.) அரையென்னுஞ் சொல்வரின் ஏகாரச்சாரியை பெறாவாம்.

(வ-று.) காலரை, களஞ்சரை, உழக்கரை.

(வி-ரை.) அற்றே: அசைநிலை. (44)

அவற்றின்முன் குறை என்பது வருதல்

204. குறைவரின் வேற்றுமை கொளின்மிகு மென்ப.

(இ-ள்.) வேற்றுமைக்கண் குறையென்னும் சொல்வரின் மிக்குமுடியும்.

(வ-று.) காணிக்குறை, தொடிக்குறை, உரிக்குறை. (45)

குற்றியலுகரம் இன் சாரியை பெறுதல்

205. குற்றிய லுகரக் கின்னே சாரியை.1

(இ-ள்.) குற்றியலுகரம் இன்சாரியை பெறுமென்க.

(வ-று.) நாகின்வளர்ச்சி, எஃகின்கால், வரகின்கதிர், கொக்கின் கால், குரங்கின்கண்,
தெள்கின்கால், ஒன்றின்குறை, களஞ்சின்குறை, ஆழாக்கின்குறை. (46)

கலத்தின்முன் அத்து வருதல்

206. கலமென் னளவே யத்தொடு சிவணும்.

(இ-ள்.) கலமென்னு மளவுப்பெயர் அத்துச்சாரியை பெறும்.

(வ-று.) கலம் + குறை = கலத்துக்குறை. (47)

பனையும் காவும் இன்னொடு வருதல்

207. பனையுங் காவு மின்னொடு சிவணும்.

1. தொல் - எழுத்து. தொகைமரபு - 25.