| எழுத்ததிகாரம் | 61 | முத்துவீரியம் |  
  
(இ-ள்.) பனையென்னும்
மரப்பெயரும், காவென்னும் பொழிற்பெயரு 
மின்சாரியைபெறும். 
(வ-று.) பனையின்கோடு,
காவின்சோலை எனவரும். (48) 
யாவர், யாது 
208. யாவ ரவர்முன்
அடுப்பின் நடுநிலை 
     வகரங் கெடுதலும் யாதது முன்வரின் 
     வகரம் வருதலு மதனியல்
பாகும். 
(இ-ள்.) அவரென்னு
மொழிக்குமுன் யாவரென்னுஞ் சொல்வரினடுநின்ற 
வகரங்கெடுதலும், அதுவென்னு மொழிக்கு முன் யாதென்னுஞ்
சொல்வரின் வகரவுயிர்மெய் 
தோன்றலு மதனியல்பாம். 
(வ-று.) அவர்யாவர்,
அவர்யார்; அதுயாது, அதுயாவது. 
(வி-ரை.) யாவர் என்பது
இடையில் வகரம் கெட்டு யார் என்றும், யாது என்பது 
இடையில் வகரம் பெற்று யாவது என்றும் நிற்பன மரூஉ
முடிபாகும். ஈண்டுக் கூறப்பெறும் 
யார், யாவது என்பன
பெயராக நிற்கும். யார், யாது என வினாப்பொருளில்
வருவன 
வினைச் சொற்களாக நிற்கும். சொல்லால்
ஒத்து நிற்பினும் இவை பொருளால் வேறுபடும். 
(தொல்
- தொகை - 30 நச்சினார்க்கினியர் உரை காண்க.) (49) 
இன்சாரியை பெறும் ஈறுகள் 
209. அ, ஆ, உ, ஊ, ஏ, ஒள விறுபெயர் 
     முன்வரு முருபிற் கின்னே
சாரியை. 
(இ-ள்.) அ, ஆ, உ, ஊ, ஏ, ஒள
விறுவாகிய மொழிக்குமுன் வருகிற 
வேற்றுமையுருபுகட்
கின்சாரியை வரும். 
(வ-று.) விளவினை, பலாவினை,
கருவினை, தழுவினை, சேவினை, வௌவினை 
யெனவரும். (50) 
அற்றுச்சாரியை பெறும்
ஈறுகள் 
210. அகர விறுபெய ரற்றொடு
சிவணும். 
(இ-ள்.)
பன்மைப்பொருளைக் கருதிய அகரவீற்றுச் சொற்கள்
அற்றுச்சாரியை 
பெறுமென்க. 
(வ-று.) பலவற்றை,
பல்லவற்றை; சிலவற்றை, சில்லவற்றை. (51) 
			
				
				 |