எழுத்ததிகாரம்64முத்துவீரியம்

(இ-ள்.) மகரமெய் இறுதியாகிய சொற்கள் அத்துச்சாரியை பெறுமென்க.

(வ-று.) மரத்தை. (60)

எய்தியதன்மேற் சிறப்பு விதி

220. இன்னொடு வருதலு மதனியல் பாகும்.

(இ-ள்.) மகரவீற்றுச்சொற்க ளத்துச்சாரியையே யன்றி இன்சாரியையும் பெறும்.

(வ-று.) உருமினை. (61)

நும்மென்னிறுதி இயல்பாகும்

221. நும்மத் தின்னையு நோக்கா தியலும்.

(இ-ள்.) நும்மென்னு மகரவீற்றுச்சொல் மேற்கூறிய அத்துச் சாரியையும்
இன்சாரியையும் பெறாதியல்பா மென்க.

(வ-று.) நும்மை.

(வி-ரை.)

‘‘நும்மென் இறுதி இயற்கை யாகும்’’ (தொகை - 15)

என்பது தொல்காப்பியம். (62)

நெடுமுதல் குறுகும் சொற்கள்

222. தாமு நாமு நெடுமுதல் குறுகும்.

(இ-ள்.) தாம் நாம் என்னுந் தன்மைப் பன்மைப் பெயர், அத்தும் இன்னும் பெறாது
நெடுமுதல் குறுகுமெனவறிக.

(வ-று.) தம்மை, நம்மை. (63)

யாம் எம்மெனத் திரியும்

223. யாமெம் மாகுமா ராயுங் காலே.

(இ-ள்.) யாமென்னும் பெயர் எம்மாகும் ஆராயுமிடத்து.

(வ-று.) எம்மை. (64)