எழுத்ததிகாரம் | 71 | முத்துவீரியம் |
(இ-ள்.) பலசிலவென்னும் பலவின்பெயர்
தமக்குமுன்னர்த் தாம்வரின் இயல்பாதலும்,
மிகுதலும், அகரங்கெட லகரமெய் றகரமெய்யாதலும், பிறசொற்கள்வரின்
அகரம்
விகற்பமாதலுமுளவாம்.
(வ-று.) பலபல - பலப்பல,
சிலசில - சிலச்சில, பற்பல - சிற்சில, பலமணி -
பன்மணி, சிலமணி - சின்மணி. (85)
எய்திய தன்மேற் சிறப்பு
விதி
245. அவைதாம் பாவினுள்
நீட்டமும் வரையார்.
(இ-ள்.) அப்பலவுஞ் சிலவுஞ்
செய்யுளினீட்டமு நீக்காது கொள்வார் புலவர்.
(வ-று.) பலாம், சிலாம்
(வி-ரை.)
‘‘பலவற் றிறுதி
நீடுமொழி யுளவே
செய்யுள் கண்ணிய
தொடர்மொழி யான’’ (உயிர்ம - 11)
என்ற தொல்காப்பிய விதியைத்
தழுவியது இந் நூற்பா. நீட்சியோடு அகரப் பேறும்
கொள்க எனக் கூறி பலாஅம் சிலாஅம் என
எடுத்துக் காட்டுவர் இளம்பூரணர். (86)
மரப்பெயர்
246. வலிவரின் மரப்பெயர்
மெலிமிகு மென்ப.
(இ-ள்.) மரப்பெயருக்கு
முன்னர்க் க, ச, த, ப க்கள் வரின் தமக்கினமாகிய
மெல்லெழுத்து மிக்குமுடியும்.
(வ-று.) விளங்கோடு. (87)
மக என்னும் பெயர்
247. இன்சாரி யைமக வேற்கு
மென்ப.
(இ-ள்.) மகவென்னுஞ்சொல்
இன்சாரியை பெறும்.
(வ-று.) மகவின்கை. (88)
2. ஆகார ஈறு
உம்மை தொக்க
இருபெயர்த் தொகைச்சொல்
248. எச்ச வும்மை
யிருபெயர்த் தொகைச்சொற்
ககரச் சாரியை யுரித்தா
கும்மே.
|