எழுத்ததிகாரம் | 74 | முத்துவீரியம் |
மேலதற்கோர் சிறப்பு
விதி
255. வல்லெழுத்து மிகினு
மான மில்லை.1
(இ-ள்.) மேற்கூறிப்போந்த மரப்பெயர்கள்
வல்லெழுத்து மிக்குமுடியினும்
குற்றமில்லையா மென்க.
(வ-று.) யா அக்கோடு, பிடா
அக்கோடு, தளா அக்கோடு (96)
ஆ, மா, என்னும் பெயர்கள்
256. ஆமா னகரமெய் யடையப்
பெறுமே.
(இ-ள்.) ஆவென்னும்
பெயரும், மாவென்னும் பெயரும், னகரச்சாரியை
பெறும்.
(வ-று.) ஆன் கோடு, மான்
கோடு. (97)
ஆ என்பதற்குச் சிறப்பு
விதி
257. 2ஆனொற் றகரமொடு
நிலையிட னுடைய.
(இ-ள்.) ஆமுன்னின்ற
னகரமெய், அகரச்சாரியையோடு
நிலைபெறுமிடனுடையனவாம்.
(வ-று.) ஆனநெய் தெளித்து .
(98)
ஆமுன் பகர ஈ
258. ஆமுன் பகரவீ
யனைத்தும்வரக் குறுகும்.
(இ-ள்.) ஆவென்னும்
மொழிக்கு முன்னின்ற ஈகார பகரம், நாற்கணமும்
வரின் ஈ,
இய்யாம்.
(வ-று.) ஆப்பீகுறிது =
ஆப்பிகுறிது; ஆப்பிநன்மை, ஆப்பிவலிது,
ஆப்பியரிது.
(வி-ரை.)
‘‘ஆன்முன் வரூஉம் ஈகார
பகரம்
தான்மிகத் தோன்றிக்
குறுகலு முரித்தே’’ (உயிர்ம - 31)
என்னும் தொல்காப்பிய
விதியைத் தழுவியது இந்நூற்பா. (99)
1. தொல் எழுத்து உயிரீற்
28.
2. ,, ,, ,, 30.
|