| எழுத்ததிகாரம் | 75 | முத்துவீரியம் |
3. இகர ஈறு
இனி, அணி என்னும்
பெயர்கள்
259. இனியணி யிகரச்
சுட்டுமொற் றிடைமிகும்.
(இ-ள்.) இனியென்னும்
பெயரும், அணியென்னும் பெயரும், இகரச்சுட்டுப்
பெயரும்
ஒற்றிடைமிக்கு முடியும்.
(வ-று.) இனிக்கொண்டான்
அணிக்கொண்டான், இக்கொற்றன் (100)
இன்றி, அன்றி என்னும்
சொற்கள்
260. யாப்பினு ளின்றியு
மன்றியு முகரம்
ஆய்வரின் மிகாதியல்
பாமென மொழிப.
(இ-ள்.) செய்யுட்கண்
இன்றி, அன்றியென்னுங் குறிப்பு வினையெச்சமொழிகள்
உகரமாகத் திரிந்துவரின்
மிகாதியல்பாமென்க.
(வ-று.) ‘நாளன்றுபோகி’
(புறம் - 144) உப்பின்று புற்கையுண்கமா
கொற்கையோனே.
(வி-ரை.)
‘‘அன்றி யின்றியென்
வினையெஞ் சிகரம்
தொடர்பினுள் உகர
மாய்வரின் இயல்பே’’ (உயிரீற்-23)
என்பது நன்னூல். (101)
தூணி என்னும் பெயர்
261. பதக்கு வரின்மிகுந்
தூணிக் கிளவி.
(இ-ள்.) தூணியென்னு
முகத்தலளவைப் பெயருக்குமுன் பதக்கென்னு முகத்தலளவைப்
பெயர்வரி னொற்றிடை மிக்குமுடியு
மென்க.
(வ-று.) தூணிப்பதக்கு. (102)
நாழி என்னும் பெயர்
262. உரிவரி னாழியி னீற்றுயிர் மெய்கெட
மருவும் டகரமாம் வல்லினப் புள்ளி.
|