எழுத்ததிகாரம் | 83 | முத்துவீரியம் |
(இ-ள்.) ஆசைப்பெருக்கத்தை யுணர்த்து
மவாவென்னுஞ் சொல்வரின் வேட்கையென்னு
மொழியிறுதி ஐகார
வுயிரும், ககர வொற்றுங்கெட்டு நடுநின்ற டகரமெய்
ணகரவொற்றாகத்
திரியும்.
(வ-று.) வேட்கை + அவா =
வேணவா.
(வி-ரை.) வேட்கை .
பொருள்கள் மேல் தோன்றும் பற்றுள்ளம். அவா - அவற்றைப்
பெறவேண்டுமென மேன்மேல் நிகழும் ஆசை.
(தொல் - எழுத்து - 288 -
நச்சர் உரை.) (134)
ஒழியிசை ஓகாரமும்
மாறுகொள் எச்சமும்
294. ஒழியிசை யோவு மாறுகொ ளெச்சமு
மிகாதியல் பாகு
மென்மனார் புலவர்.
(இ-ள்.) ஒழியிசையைத்
தரும் ஓகாரமும், மாறுகொளெச்சமும்
மிகாதியல்பாகும்.
(வ-று.) புற்றோ புதலோ. (135)
கோ என்பதன் முன் இல்
வருதல்
295. இல்லொடு கிளப்பி
னியல்பா கும்மே.
(இ-ள்.) ஓ, இல்லென்னும்
பெயரோடு புணரின் இயல்பாகும்.
(வ-று.) கோவில்.
(வி-ரை.)
‘‘இல்லொடு கிளப்பின்
இயற்கை யாகும்’ (உயிர் - 61)
என்பது தொல்காப்பியம்.
(136)
10. ஒளகார ஈறு
ஒளகார ஈற்றுச்சொல்
296. ஒளகார விறுதி
மிகுதலும் உகரச்
சாரியை பெறுதலுந்
தனக்குரித் தாகும்.
(இ-ள்.) ஒளகார
வீற்றுச்சொன் மிகுதலும், உகரச் சாரியை
பெறுதலுமாம்.
(வ-று.) கௌவுக்கடிது. (137)
|