| எழுத்ததிகாரம் | 88 | முத்துவீரியம் |
(வ-று.) மரம் + குறிது =
மரங்குறிது. (156)
அகம் முனர்ச் செவி கை
வருதல்
316. அகமுனர்ச் செவிகை
வரினிடை யனகெடும்.1
(இ-ள்.) அகமென்னுஞ்
சொற்குமுன், செவி, கை, என்னுஞ் சினைப் பெயர் வரின்,
நடுநின்ற ககரவொற்றும், அகரவுயிருங்
கெடும்.
(வ-று.) அகம் + செவி =
அஞ்செவி. அகம் + கை = அங்கை. எனவரும். (157)
இலம் முன் படு வருதல்
317. இலமுன் படுவரி
னியல்பா கும்மே.
(இ-ள்.) இலமென்னுஞ்
சொற்குமுன்னர்ப் படுவென்னுஞ் சொல்வரி
னியல்பாம்.
(வ-று.) ‘இலம்படு புலவர்.’
(மலைபடு - 576) (158)
எண்ணுப் பெயர்
318. எண்வரின் ஆயிரம்
அத்தொடு சிவணும்.
(இ-ள்.) ஆயிரமென்னும்
எண்முன், எண்ணுப்பெயர்கள் வரின் அத்துச்சாரியை
பெறும்.
(வ-று.) ஆயிரத்தொன்று,
ஆயிரத்திரண்டு, ஆயிரத்தைந்து. (159)
இதுவுமது
319. அளபொடு நிறையும்
வரின்மிகு மென்ப.
(இ-ள்.) ஆயிரமென்னும்
எண்முன், அளவுப்பெயரும் நிறைப்பெயரும் வரின்
மிக்குமுடியும்.
(வ-று.) ஆயிரக்கலம்,
ஆயிரக்கழஞ்சு. (160)
ஈம், கம், உரும்
320. ஈம், கம், உரும் உக
ரத்தொடு நிலையும்.
1. நன் - எழுத்- மெய்யீற் -
19.
|