எழுத்ததிகாரம்94முத்துவீரியம்

(வ-று.) தான் + கை = தன்கை; யான் + கை = என்கை எனவரும். (180)

இதுவுமது

340. குறுகலுந் திரிதலும் அல்வழிக் கிலவே.

(இ-ள்.) அல்வழிக்கண் மேற்கூறிய விரண்டு பெயரும் நெடுமுதல் குறுகலும் என்னாகத்
திரிதலுமிலவாம்.

(வ-று.) யான்குறியேன், தான்பெரியன். (181)

முன்றில்

341. முன்னொடு சிவணின் முதலிலோர் றவ்வுறும்.

(இ-ள்.) முன்னொடுபுணரின், இன்முதலிலொரு றரகவொற்றுத் தோன்றும்.

(வ-று.) முன் + இல் = முன்றில். (182)

பொன்

342. பொருளெனப் பெயர்பெறும் பொன்னிறு கெடவொரு
     லகார மகாரமுந் தோன்று மென்ப.

(இ-ள்.) பொருளென்று பெயர்பெற்ற பொன்னிறுதி கெட ஒரு லகரவொற்றும்
மகரமெய்யுந் தோன்றும்.

(வ-று.) பொன் + படை = பொலம்படைப் பொலிந்த. (மலைபடு - 574)

(வி-ரை.) லகாரம் மகாரம் எனப் பொது வகையாற் கூறினாரேனும் லகாரத்தை உயிர்
மெய்யாகவும், மகாரத்தை ஒற்றாகவும் கொள்க. உரையில் லகரவொற்று எனக் குறித்திருப்பது
பொருத்தம் இல்லை. (183)

6. யகர ஈறு

343. வேற்றுமை யல்வழி யகரவீ றியல்பே.

(இ-ள்.) அல்வழிக்கண் யகரமெய்யிறுதியாகிய சொற்களுக்கு முன் வருகிற க, ச, த,
ப க்கள் மிகாதியல்பாகும்.

(வ-று.) நாய்குறிது, நாய்சிறிது, நாய்தீது, நாய்பெரிது. (184)