எழுத்ததிகாரம்97முத்துவீரியம்

லகர ஈற்றின்முன் மென்கணம் வருதல்

351. 1 மெல்லெழுத் தியையி னகர மாகும்.

(இ-ள்.) மெல்லெழுத்துக்களோடு புணரின், னகர மெய்யாகத் திரியுமென்க.

(வ-று) கன்ஞெரி, கன்முரி. (192)

நெட்டெழுத்தின் முன்வரும் லகரம்

352. நெட்டெழுத் திம்ப ரியல்பா கும்மே.

(இ-ள்.) நெட்டெழுத்துக்கு முன்னின்ற லகரமெய் மிகா தியல்பாகுமென்க.

(வ-று.) பால்கடிது. (193)

லகரத்தின்முன் தகரம்

353. தகரம் வரும்வழி தனிநிலை யாகும்.

(இ-ள்.) அல்வழிக்கண், தகரமெய் முதன்மொழியாக வரின் றகரமாதலே யன்றி
ஆய்தமாகவுந் திரியுமென்க.

(வ-று.) கற்றீது - கஃறீது. (194)

அல்வழி முடிபு

354. அல்வழி யெல்லாம் உறழு மென்ப.

(இ-ள்.) அல்வழிக்க ணெல்லாத்திரிபும் வல்லெழுத்துக்களோ டுறழ்ந்து முடியும்.

(வ-று.) கல் + குறிது = கற்குறிது, வில் + குறிது = விற்குறிது. (195)

நெல், செல், கொல், சொல்

355. நெல்லுஞ் செல்லுங் கொல்லுஞ் சொல்லும்
      அல்வழி யானும் றகர மாகும்.2

1. தொல் - புள்ளி - 72.

2. நன் - எழுத் - மெய்யீற் - 29.