எழுத்ததிகாரம் | 98 | முத்துவீரியம் |
(இ-ள்.) நெல், செல்,
கொல், சொல் நான்கு மொழியும் அல்வழிக்கண்ணும்
றகரமாகத்
திரியும்.
(வ-று.) நெற்காய்ந்தது,
செற்கடிது, கொற்கடிது, சொற்கடிய. (196)
இல் என்னும் சொல்
356. இன்மை யுணர்த்து மில்லென் கிளவிக்
கைகாரம் வரும்வழி யியல்பொடு மிகலும்
ஆகாரம் வரும்வழி
மிகலுமாம் வேற்றுமை.
(இ-ள்.) வேற்றுமைக்க
ணில்லாமையை யுணர்த்தும் இல்லென்னுஞ் சொல்
ஐகாரச்சாரியை பெறுங்கால் இயல்பாதலு மிகுதலு
மாகாரச் சாரியை பெறுங்கால்
மிகுதலுமாமென்க.
(வ-று.) இல்லைபொருள்;
இல்லைப்பொருள்; இல்லாப்பொருள். (197)
வல்
357. வல்லுக ரத்தொடு
வருமென மொழிப.
(இ-ள்.) வல்லென்னுஞ் சூதாடு
கருவிப்பெயர் உகரச்சாரியை பெறுமென்க.
(வ-று.) வல்லுக்கடிது. (198)
வல் என்பதன் முன்
பலகையும் நாயும்
358. பலகையு நாயும் வரூஉங்
காலை
அகரச் சாரியை யடையு
மென்ப.
(இ-ள்.) வல்லென்னும்
மொழிக்குமுன், பலகையென்னும் பெயரும், நாயென்னும்
பெயரும் வந்துபுணரின் அகரச் சாரியை பெறும்.
(வ-று.) வல்லப்பலகை,
வல்லநாய். (199)
ஆலும் வேலும்
359. ஆலும் வேலு மம்மொடு
சிவணும்.
(இ-ள்.) மரப்பெயராகிய
ஆலென்னு மொழியும் வேலென்னு மொழியும் அம்முச்
சாரியை பெறும்.
|