என இந்நூலிலும், |
“ | அருந்தமிழ்ச் சந்தத்து ஐயும் ஒளவும் | | ஈற்றிற் குறளாய் இடையினும் முதலினும் | | குறிலொடு ஒற்றுஎனவும் குலா அய்ச் சிறிதும் | | நெடில்எனல் இன்றி நிகழும் அன்றே”1 |
|
என வேறிடத்தும் இவரால் கூறப்பட்டுள்ளது. இக்கருத்தை வலியுறுத்தவே இந்நூற்பாவுள் “மெல்லெனக் காட்டும் வியன் தொனி உடைத்தே” என விதந்து கூறினார். (13) |
|
14. | உயிர்எழுத்து உரைத்தனம், உரித்த தேங்காய்க் | | கண்போல் முச்சுழி கவினுறக் காட்டல் | | ஆய்தம்; துணைஇழந்து அலமரும் காக்கை | | குளறலில் மிடற்றில் குமுறொலி தருமே. |
|
இதுகாறும் உயிர்எழுத்துகளின் வரிவடிவத்தைக் கூறினோம். (இனி மற்றவற்றைக் கூறப்புகுவோம் என்பது பொருள் எச்சம்.) உரித்த தேங்காயிற் காணப்படும் கண்களைப்போன்று மூன்று சுழிகளை வரைந்து காட்டுதல் ஆய்த எழுத்தின் வரி வடிவம் ஆகும். அது தன் இணைப்பறவையைப் பிரிந்து வருந்தும் காகம் துன்புற்றுக் கரைதலைப்போன்று கழுத்தில். குமுறுகின்ற ஓசையை உடையது என்றவாறு. |
சார்பெழுத்துகளின் பிறப்புணர்த்தும் தொல்காப்பியச் சூத்திரத்திற்கு2 இளம்பூரணர் உரைத்த உரையின் வழியே பவணந்திமுனிவர். |
“ | ஆய்தக்கு இடம்தலை, அங்கா முயற்சி”3 |
|
என்றார். ஆனால் நச்சினார்க்கினியர் முற்கூறப்பட்ட தொல்காப்பிய நூற்பா உரையில், “ஆய்தம் தனக்குப் பொருந்தின நெஞ்சுவளியால் பிறக்கும்”4 என்கிறார். இவ்வாறு ஆய்தம் |
|