எழுத்திலக்கணம்026
என்ற கருத்தான் இவ்வாறு இவ்வாசிரியர் முந்துநூல்களோடு முரண்படக் கூறினார். இது இலக்கண வரலாற்றில் தர்க்கரீதியாக வளர்ந்த கருத்து வளர்ச்சியாகும். இவை போன்றவைபற்றி யன்றோ முன்னால் பாயிரத்திலேயே, “முன்னோர்மொழியைப் பெருக்கிக் குறுக்கி மொழிவதன்றே”1 என்றார். இவர் ஆய்தம் “மெய்போலும்” என்றாரன்றி “மெய்யே” எனக் கொள்ளவில்லை. இது மெய்யெழுத்துக்களைப்பற்றி,
உயிர்ஒலி பிறழ்தற்கு ஆதரம் ஆகி
அதனொடு கூடின் தொனிப்பது ஆகி
ஆய்தம் என்கைக்கு அண்ணி தாகிக்
கிடக்கும் என்றே கிளத்தினர் புலவோர்”2
என இவர் கூறியதால் தெளிவாகிறது. தொல்காப்பியரும் “குறியதன் முன்னர்” என்னும் நூற்பாவில் ஆய்தப்புள்ளி என்றே குறிப்பிடுகிறார்.3 இளம்பூரணர் இதன் உரையில் ”புள்ளி என்றதனான் ஆய்தத்தை மெய்ப்பாற்படுத்துக் கொள்க”4 என்றும், நச்சினார்க்கினியர் “ஆய்தப்புள்ளி-ஆய்தமாகிய ஒற்று”5 என்றும் உரைக்கின்றனர்.
ஆய்தம் பற்றிய இந்நூலாசிரியர் கருத்து இந்நூல் 92ஆம் நூற்பா உரையில் மேலும் கூறப்படும்.
இனி அடுத்து நிறுத்தமுறையானே மெய்யெழுத்துகள் கூறப்பெறும்.
(14)
3. மெய் எழுத்து
15.ஒற்றின் சிரந்தொறும் ஒன்றா ஒருசுழி
 வைத்து வரைதரில் மருட்டா; அன்றெனில்
 அகரம் சார்உயிர் மெய்எனப் பிறழும்;
 அதனால் அவற்றின் வடிவே அறைகுதும்;
 அவற்றின் தொனிதொறும் ஆவியும் உடலும்