| தொனிக்கும் இயல்பே தோம்அறக் கலந்து | | மிளிர்தரும் ஆயினும் விளம்பும் காலை | | இவற்றின் ஒலிமுன் எழும்ஆ தலின்இப் | | பொறிகளின் ஒலியெனப் புகலல் நன்றே. |
|
மெய்யெழுத்துகளின் மேல் அவற்றைத் தொடாமல் தனியாக ஒரு சுழியிட்டு எழுதின் அது மயங்கவைக்காது. (அதாவது வேறு எழுத்தாக உணரப்படாமல் ஒற்றாகவே கருதப்படும்.) அங்ஙனம் மேற்சுழி இல்லெனில் அகரத்தோடு கூடிய அந்த மெய்யின் உயிர்மெய் எழுத்தின் வடிவமாகும். எனவே அகரம் சேர்ந்த ஒலிவடிவிற்குரிய வரிவடிவையே இந்நூலுள் உரைப்போம். உயிர்மெய் எழுத்துகளின் ஒலி ஒவ்வொன்றிலும் உயிர், மெய் ஆகிய இரண்டும் தம்முள் நன்கு கலந்து விளங்கும். என்றாலும் உச்சரிக்கும் பொழுது மெய்யின் ஒலி முற்படுதலின் உயிர்மெய் எழுத்து மெய்யெழுத்தின் ஒலியை உடையது எனல் தக்கதாம் என்றவாறு. |
மெய்யெழுத்து தன் மேற்புள்ளியை இழந்து ககரம் முதலிய வடிவம் பெறுவதில்லை. ஆனால் ககரம் முதலிய அகர உயிர்மெய்களே புள்ளியேற்று மெய்களாகின்றன. இது “எழுதிக்காட்டுமிடத்துக் ககரம் முதலியன உயிர்பெற்று நின்ற வடிவாக எழுதிப் பின்னர்த் தனிமெய்யாக்குதற்குப் புள்ளியிட்டுக் காட்டு கின்றவாக்கான் “... 1என நச்சினார்க்கினியரால் தெளிவாக்கப்படுகிறது. |
“மெய்யின் வழிய துயிர்தோன்று நிலையே”2 என்னும் நூற்பாவும் அதன் உரையில் உரையாசிரியர், “மெய்யும் உயிரும் முன்னும் பின்னும் பெற நிற்கும் என்றமையால் அக்கூட்டம் பாலும் நீரும் போல உடன் கலந்ததன்றி விரல்நுனிகள் தலைப்பெய்தாற்போல வேறு நின்று கலந்தனவல்ல என்பது பெறுதும்”3 என்றதும் இங்கு கருதத்தக்கதாம். (15) |