அறுவகையிலக்கணம்031
நாம் இன்று பயன்படுத்தும் ‘கை’ என்ற குறி தோன்றியது. இது இந்நூலாசிரியர் காலத்திலேயே வழக்கத்திற்கு வந்துவிட்டது. இவரும் தம் கைப்பட எழுதிய சுவடிகளில் இதனையே பயன்படுத்தியுள்ளார். எனவே தான் “இணைக்கொம்பு ஒன்றோடொன்று இசைவுற” என்றார்.
“ககார ஙகாரம் முதல்நா அண்ணம்”1 என்பது தொல்காப்பியம். உரையாசிரியர்களும் நன்னூலாரும்2 ககரமும்ஙகரமும் நாவின் அடியும் அண்ணத்தின் அடியும் பொருந்தப் பிறக்கும் என்றே பொருள் கண்டனர். அண்ணத்தின் அடிப்பகுதி என அவர்கள் கொண்ட இடத்தையே இவ்வாசிரியர் மிடற்றின் மேற்பகுதி என உரைக்கிறார். இவ்வேறுபாட்டால் பெரிய மாறுபாடு இன்மை உணர்க.
(18)
ஙகர வருக்கம்.
19.கோஎனும் எழுத்தின் மூன்றாம் குறியின்
 ஈற்று வரையைக் குறைத்து, திற் கூகரத்து
 ஈறுஉறப் பொருத்தி, மேல்வரை பொருந்தா
 வண்ணம்மேல் நீட்டல் ஙகரம் ஆகும்;
 அந்நிலை வரைஇடம் கிக்கீ அணிபிறை
 மருவிடில் ஙிகர ஙீகாரம் விளங்கும்;
 அவ்வரை அடிதொட்டு அகர ஆகாரத்து
 ஈறு கூட்டில் ஙுங்ஙூ இயங்கும்;
 ஙாவொடு ஙெங்ஙே ஆதிய பிறவும்
 காவொடு கெக்கே ஆதிய போல்வ;
 அடிநா உள்நாத் தொடும்ஒலி யினவே.
கோ என்ற எழுத்தின் மூன்றாவது சின்னத்தின்(£) கடைசி குத்துக்கோட்டைப் பாதியாகக் குறைத்து அவ்வடிவத்தோடு கூ என்ற எழுத்தின் இறுதியைச் சேர்த்து அதன் நுனியை நேராக மேலே நீட்டினால் ஙகரம் ஆகும்; அவ்வாறு கடைசியாக வரையப் பெற்ற குத்துக்கோட்டின் இடப்புறம் கி, கீ என்பவை