பெறுவன போன்ற பிறைகளைச் சேர்த்தால் ஙி, ஙீ தோன்றும்; கடைசிக் கோட்டின் அடிப்பகுதியோடு அகர ஆகாரங்கள் பெறும் ஈற்றுக் குறியைச் சேர்த்தால் முறையே ஙு, ஙூ வரும்; ஙா, ஙெ, ஙே முதலிய மற்றவை கா, கெ, கே போன்றனவே. நாக்கின் அடிப்பாகம் மேல்அண்ணத்தில் உள்ள சிறுநாக்கைத் தொடுவதால் இவ்வொலி பிறக்கிறது என்றவாறு. |
இந்நூல்பாவுள் ஆதியபிற என்றது ஙை, ஙொ, ஙோ, ஙௌ என்பனவற்றையாம். |
தொல்காப்பியமும் நன்னூலும் கூறும் பிறப்பிடத்தையே இவர் வேறு வாய்பாட்டால் குறிப்பிடுகிறார். |
பொதுவாக உயிர்மெய் எழுத்துகளின் நெடிலுக்குச் சாரியை சேர்க்கும் மரபு இல்லை. இந்நூலாசிரியர் புதியன புகுதலாகக் கரம், காரம் எனும் இரு எழுத்துச் சாரியைகளையும் புணர்த்துக் கூகரம், ஙீகாரம் என ஆண்டிருக்கிறார். இப்புதிய சொல்லாட்சி இவ்வுரையிலும் கைக்கொள்ளப்பட்டுள்ளது. (19) |
சகரவருக்கம் |
20. | ஈற்றின் வளைவுஒன்று இன்றெனில் ககரம் | | சகரம் ஆம்; அதன் ஈற்றுக் கிடைவரை | | நடுஒரு சிறுவரை கீழ்நோக்கி நாட்டில் | | சுகரம் ஆம்; அது தொட்டு வலம்சுழித்துக் | | குகரத்து ஈறுஎன நிறுவிற் சூஆம்; | | சாசி சீயொடு செகரம் ஆதிய | | காகி கீயொடு கெகரம் போல்வன. | | இவற்றின் தொனிநடு நாவில்நின் றெழும்கால் | | துணைக்கொடு வரும்எனச் சொல்வது கடனே. |
|
ககரத்தின் கடைசியில் எழுதப்படுகின்ற (அங்குசம் போன்ற) வளைவு ஒன்று இல்லாவிடின் அதுவே சகரத்தின் வரிவடிவாம். சகரத்தின் கடைசிப் படுக்கைக் கோட்டின் நடுவே கீழ் நோக்கிய ஒரு சிறிய கோடு வரையப்பட்டால் சு என்ற எழுத்து ஆகும். அச்சிறுகோட்டை வலமாகச் சுழித்துக் |