23. | குறுகிய இரட்டைக் கொம்புஈறு எகரம் |
| பொருந்த ணகரம் பொலிதரும்; ஞகரம் |
| புணர்ந்துஅவ் வொருமுச் சுழியையும் முறையிற் |
| சுற்றி நடுச்சுழி மேல்வர ணாஆம்: |
| ஞிஞ்ஞீ மேற்குறி ணவ்வொடு அம்முறையில் |
| சேர்தர ணிண்ணீ திகழ்தரும்; ணுண்ணூ |
| ணெண்ணே ணௌஎனும் எழுத்தினம் ஞுஞ்ஞூ |
| ஞெஞ்ஞே ஞௌஎனல் போலும் நிலையின; |
| உகரத்து அடியினைச் சிறிதுமேல் வலம்கொணர்ந்து |
| அதனொடு ணகரம் பொருத்த ணைஆம்; |
| ணொண்ணோ இரண்டும் கொம்புஇயல் வழாஅ |
| இருகுறி உடைத்தாய்ப் பிற்குறி ணாவாக் |
| கிடக்கும்;இப் பகுதியில் கிளர்தொனி எழுங்கால் |
| நுனிநா அடிப்புறம் அண்ணாத் தொட்டுத் |
| தடவும் என்று உரைப்பது தக்கோர் மரபே. |