அறுவகையிலக்கணம்037
ணகரத்தை இணைத்து எழுதினால்ணை ஆகும். ணொ, ணோ என்ற இரு எழுத்துகளும் குறில் நெடிலுக்கு உரிய கொம்புகள் மாறாமல் இரண்டு குறிகளை உடையனவாகவும், இரண்டாவது குறிணாவின் வடிவமாவும் இருக்கும், இந்த ணகரவருக்க எழுத்துகளுக்கு உரிய ஒலி உண்டாகும் போது நுனிநாவின் கீழ்ப்பகுதி அண்ணத்தைப் பொருந்தித் தடவும் என்று கூறுதல் இலக்கணம் அறிந்த சான்றோர்களின் வழக்கமாம் என்றவாறு.
தொல்காப்பியமும் நன்னூலும் நுனிநாவும் அண்ணமும் பொருந்த ட, ண பிறக்கும் என்கின்றன.1 இங்கே வருடுதல் கூறப்படவில்லை. ஆனால் ரகரழகரத்தைப் பற்றி இந்நூல்கள் “நுனிநா அணரி அண்ணம் வருட ரகர ழகாரம் ஆயிரண்டும் பிறக்கும்”2 எனவும், “அண்ணம் நுனிநா வருட ரழவரும்”3 எனவும் கூறுகின்றன. ணகரத்தை உச்சரித்துப் பார்த்தால் வருடுதல் தெரிகிறது. ணகரத்திற்கும் ரகரழகரங்களுக்கும் ஒலி வேற்றுமை எவ்வாறு உண்டாகிறது? ணகரத்தைக் கூறும்போது நாக்கு மடிந்து அடிப்பகுதி மேல் அண்ணத்தை வருடுகிறது. மற்ற இரு எழுத்துகளுக்கும் நேராக-அதாவது நாவின் மேற்பகுதி வருடுகிறது. இந்த வேறுபாடு நுனிநா அடிப்புறம் அண்ணாத்தொட்டு என மிகத் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. நுனிநாவின் மேற்புறம், கீழ்ப்புறம் எனப்பிரித்துக் காட்டும் முதல் இலக்கணநூல் இதுவே.
தடவுதல் முன்னூல்களிற் சொல்லப்படாததாலும், நாவின் அடிப்பகுதி எனப்புதிய பாகுபாடு கைக்கொள்ளப்பட்டதாலும் புதுமை என்பதால் மட்டுமே புறக்கணித்து விடாமல், சரியானதாயின் ஏற்றுக்கொள்ளும் சான்றாண்மை உடையவர் ஏற்பர் என்ற கருத்தில் தக்கோர் மரபே என்றார்.
(23)
தகர வருக்கம்
24.சகரத்து ஈற்று வரையினைக் குறுக்கிக்
 கீழுற இழுக்கில் தகரம் ஆகும்;