எழுத்திலக்கணம்042
போன்றே வகுத்து நன்னூற் சூத்திரத்தை மறுக்கிறார்.1இவ்வாசிரியர்கள் ஐவரும் யகரத்தின் பிறப்பிற்கு அடிநாவையும் மேல் அண்ணத்தையுமே முயலிடமாக்கினர். ஆயின் இந்நூலாசிரியர் இக்குழப்பத்தை யொழித்துத் தெளிவேற்படுத்த வேண்டி நாவின் நுனியையும் அடிப்பற்களையும் வைத்துக் காட்டுகிறார். நாவின் நுனி உட்புறம் கீழாக வளைந்து அதன் மேற்புறம் அடிப்பல்வரிசையின் உட்புறம் பொருந்துவதால் யகரம் பிறப்பதை உச்சரித்து உணர்ந்து கொள்ளலாம். இவர் நாவின் மேற்பகுதி கீழ்ப்பகுதி எனப் புதியதாகப் பாகுபாடு செய்து கொண்டதால் இது எளிமையாயிற்று.
“அகரத்து இம்பர் யகரப் புள்ளியும் ஐஎன் நெடுஞ்சினை மெய்பெறத் தோன்றும்”2“அம்முன் இகரம் யகரம் என்றிவை எய்தின் ஐஒத்து இசைக்கும்”3 “இகர யகரம் இறுதி விரவும்”4 என்ற நூற்பாக்கள் யகரத்தின் இகரச் சார்பினை மறைமுகமாகக் காட்டுகின்றன; இந்நூல் நேராகக் கூறுகிறது. ஆராயுமிடத்து இதில் புதுமையோ அன்றி முரணோ இன்மை தெளிவாகும்.
(28)
ரகர வருக்கம்
29.யாஎனும் எழுத்தின் இரண்டாம் குறியே
 ரகரம் ஆகும்; நிந்நீ உறுகுறி
 பொருந்த ரிகர ரீகாரம் தோன்றும்;
 ரகர ஈற்றின் நிலைவரை நடுவலந்
 தொட்டு ஞஈறு புணரினும், அதன்நுனி
 சுழிப்பினும் ருகர ரூகாரம் ஒளிர்தரும்;
 ராவொடு ரெகரம் ஆதிய யாவும்
 மும்முறை பிறழா வண்ணம் கிடக்கும்.
 நுனிநா அண்ணா மெல்லெனத் தொட்டுப்
 பின்னுறத் தடவில் பிறங்கொலி யினவே.
யா என்ற எழுத்தின் இரண்டாவது சின்னமே (கால்) ரகர வரிவடிவம் ஆகும். நி, நீ போன்ற பிறைகளோடு சேர்ந்தால்