அவ்வளைவில் வலப்புறம் கீழிருந்து நு, நூ என்பனவற்றிற்குரிய இறுதிப்பகுதியைச் சேர்த்தால் முறையே லு, லூ தோன்றும். லையின் வடிவம் ணையின் வடிவத்தைப் போன்றதேயாம். லா, லி, லீ, லெ, லே, லோ லௌ என்னும் எட்டு உயிர்மெய்களும் யகரவருக்கத்தின் அவ்வவ்வுயிர்மெய்களைப் போன்றே விளங்கும். நாவின்நுனி அண்ணத்தை முன்நோக்கித் தடவுவதால் இவ்வொலி பிறக்கும் என்றவாறு. |
“நாவிளிம்பு வீங்கி அண்பல் முதலுற ஆவயின் அண்ணம் ஒற்றவும்”1 எனத் தொல்காப்பியரும், “அண்பல் முதலும் அண்ணமும் முறையின் நாவிளிம்பு வீங்கி ஒற்றவும்”2 என நன்னூலாரும் மேல்நோக்கி வளைவதால் நாவின் ஓரங்கள் சற்றுப் பருத்தலைக் குறிப்பிட்டனர். இந்நூற்பா நாவின் விளிம்பைப் பற்றிக் கூறாமல் நுனிநா அண்ணத்தை முன்னோக் தடவலகரம் தோன்றும் என்கிறது. அண்ணத்தை முன்னோக்கித் தடவும் என்றதால் மேல்நோக்கி வளைந்து பின்னால் ஒற்றியது தானே பெறப்படுகிறது. ஒற்றினாலேயே லகரம் பிறக்கும் என முன்னூல்கள் இரண்டும் கூறினும் தடவினால் தான் லகரவோசை தோன்றுமென்பதை உச்சரித்துப் பார்த்து உணரலாம். (30) |
வகர வருக்கம் |
31. | பகரத் தலைநிலை வரைச்போய்ச் சுழியுறில் | | வகரம் தோன்றும்: மற்றைய பதினோர் | | எழுத்தும் அவ்வாறு இசைவுறில் இவையாம்; | | மேற்பல் நுனிஅடி இதழில் பொருந்தத் | | தொனிப்பன வாம்எனச் சொல்வது துணிவே. |
|
பகரத்தின் ஆரம்பத்திலுள்ள நேர்கோட்டிற்குப் பதிலாக ஒரு சுழி வரையப்பட்டால் அது வகரத்தின் வரிவடிவம் ஆகும். மற்ற பதினோர் உயிர்மெய்களும் பகரவருக்கத்தின் குறிகளை அப்படியே பெறும். மேல் வரிசைப் பற்களின் நுனி கீழ்உதட்டில் பொருந்தினால் வகரம் பிறக்கும் என்றவாறு. (31) |
|