| அண்ணா அடியில் நுனிநா அடிதொட்டு | | ஒலிப்பன வாம்என்று உரைத்திடல் உரித்தே. |
|
ஒளகார உயிர் ஏறிய அனைத்து உயிர்மெய்களின் வடிவத்திலும் கடைசியில் வரையப்படும் எழுத்தே ளகரம் ஆகும். லைகாரம் பெறும் சின்னத்தைப் பெற்று ளை என்ற எழுத்து விளங்கும். மற்ற பத்து உயிர்மெய்களும் ரகர வருக்கத்திற்குரிய குறிகளையே பெற்றிருக்கும். அண்ணத்தின் அடிப்பகுதியில் நுனிநாவின் அடிப்பாகம் பொருந்தி வருடுவதால் இவை ஒலிக்கின்றன என்றவாறு. |
நாவிளிம்பு வீங்கி ஒற்றுதல் லகரத்திற்கும், வருடுதல் ளகரத்திற்கும் உரிய சிறப்பு முயற்சி என்பது தொல்காப்பியர், பவணந்தியார் கருத்தாம்.1 இவ்வாசிரியர் வருடுதலைப் பொதுவாக்கி நா நுனியின் மேற்புறம் மேல் அண்ணத்தை வருட லகரம் தோன்றும் எனவும், நா வளைந்து அதன் கீழ்ப்புறம் அடி அண்ணத்தை வருட ளகரம் பிறக்கும் எனவும் தெளிவாக்குகிறார். முன்னூல்கள் மெய்யெழுத்துகளுக்கு மட்டுமே பிறப்புணர்த்தின. இவர் உயிர்மெய்கள் அனைத்திற்கும் பொதுவாகக் கூறுகின்றார். ல, ள மெய்களை மட்டுமன்றி அவ்வருக்க உயிர்மெய்களையும் உச்சரித்துப் பார்த்தால் வருடுதல் பொதுவென்பதும், பொருந்தும் பகுதிகளே சிறப்பென்பதும் தெற்றென விளங்கும். இந்நூற்பாவுரையுள் வருடுதல் என்ற தொழில் முப்பதாம் சூத்திரத்திலிருந்து வருவித்துக் கொள்ளப்பட்டது. (33) |
றகர வருக்கம் |
34. | கீழ்நோக்கி இருவளைவு ஒன்றொடொன்று இட்டு | | வலத்துள வரையைக் கீழுற இழுத்திட | | றகரம் தோன்றும்; அவ்வரை அளவில் | | தொட்டுக் குகரத்து ஈறு காட்ட | | றாஎனல் விளங்கும்; றொகர றோகாரத்து | | இதுசேர்ந்து ஈருரு வாகச் செய்யும்; | | றிகரம் ஆதி றைவரை ஏழும் |
|
|