முற்பாதி வடிவத்தை மட்டும் உடைய ஒற்றைக் கொம்புடன் (ª)
எகர வடிவம் இணைந்தால் னகரம் தோன்றும். இவ்வருக்கத்தின் மற்ற உயிர்மெய்கள் பதினொன்றும் னகர உயிர்மெய்க் குறிகளையே பெறும் நா நுனி அண்ணத்தைப் பொருந்துவதால் னகர ஒலி தோன்றும் என்றவாறு. |
இவ்வீற்று னகரம் தமிழ்மொழி ஒன்றைத் தவிர வேறு எம்மொழியிலும் இல்லை. இதனைக்காட்டவே முன்நா அண்ணா முட்ட னகரம் பிறக்கும் எனக் கூறாமல் தமிழில் உள்ள னகரத்தை உச்சரித்தால் முன்நா அண்ணா முட்டும் என்று மாற்றிக் கூறினார். |
இனித் தொடர்ந்து நிறுத்த முறையானே அலகெழுத்து கூறப்படும். (35) |
5.அலகெழுத்துகள் |
36. | உயிர்மெய் எழுத்தும் உரைக்குமாறு உரைத்தனம்; | | அலகினைக் கீழ்என நடுஎன மேல்என | | அளவுஎனப் பிரித்துஅவ் வாறே அவற்றின் | | உருவுடன் ஒலியும் உரைக்குதும் முறையே. |
|
உயிர்மெய்யெழுத்துகளை எந்த அளவு உரைக்க இயலுமோ அந்த அளவு கூறினோம். இனி நிறுத்த முறையானே அலகெழுத்துகளைக் கீழ், நடு, மேல், அளவு என நான்கு பகுப்பாக்கி அம்முறைமையிலேயே அவற்றின் வரிவடிவத்தோடு பெயரையும் கூறுவாம் என்றவாறு. |
நூற்பா ‘ஒலி’ என்றே குறிப்பினும் அலகுக்குறியீடுகள் ஓலிக்குறியீடுகளாக அன்றிச் சொற்குறியீடுகளாகவே இருத்தலின் உரையில் பெயர் என்று கூறப்பட்டது. கீழ் முந்திரி (1/102400) முதல் முந்திரி (1/320) வரை உள்ள பின்னங்கள் கீழ் அலகு என்றும் முந்திரி முதல் ஒன்றுவரை உள்ள பின்னங்கள் நடு அலகு என்றும், ஒன்றிற்கு மேற்பட்ட முழு எண்கள் மேல் அலகு என்றும், முகத்தலளவை பற்றிய எண் வடிவங்கள் அளவலகு என்றும் பிரித்துக் கொள்ளப்பட்டன. |