அறுவகையிலக்கணம்051
புறம் மேலாக வளைத்தால் அது அரைக்காணியின் (1/160) சின்னம் ஆகும். முந்திரியில் படுக்கைக்கோடு முதலாக உள்ள பகுதிகளை நீக்கிவிட்ட வடிவம் காணி (1/80) ஆகும். சுகரமே அரைமாவின் (1/40) குறியீடாம். கூ எனும் எழுத்தின் கடைசிப் படுக்கைக் கோட்டை நீக்கி மேற்புறம் வலமாக வளைத்தால் முக்காணி (3/80) ஆகும். பகர வடிவே ஒரு மாவின் (1/20) அடையாளமாம். முன் கூறப்பட்ட கீழ்முக்காற் குறியீட்டின் கடைசிக் குத்துக்கோட்டைத் தொடும்படி மேற்புறம் வளைத்து ஒரு கோட்டிலும் பொருந்தாது அக்கோட்டின் குறுக்கே வலப்பக்கம் கொணர்ந்து மேலே ஒரு குத்துக் கோட்டை வரைவதால் பெறப்படும் வடிவம் அரைக்காலின் (1/8) சின்னம் ஆகும். வகர இகர ளுகரங்கள் முறையே கால் (1/4) அரை (1/2) முக்கால் (3/4) எனப்படும். இவையேயன்றி வேறு சில கூட்டெழுத்துகளாகவும் குறிக்கப்படும். ஆதலால் ஒவ்வொன்றையும் தனித்தனியே எடுத்துக் கூறவில்லை. இன்றியமையாத நடுவலகுக் குறியீடுகள் இவையே என்றவாறு.
கீழ்முக்கால் எனத் தெளிவாக்க முற்பகர் முக்கால் என்றார்.
இவ்வரி வடிவங்களைத் தமிழ்நாடு அரசு கீழ்த்திசைச் சுவடி நிலையம் 1951 ஆம் ஆண்டு வெளியிட்ட “ஆஸ்தான கோலாஹலம்” என்ற நூலில் காணலாம்.
(38)
மேல் அலகு
39.ககரமும் உகரமும் ஒன்றுஇரண்டு ஆகும்;
 ஙகரத்து ஈற்று நிலைவரை தள்ளில்
 மூன்றாம்; சகரத்து ஈறுதொட்டு ஒரு நிலை
 வரைமேல் நோக்கி நிறுவிடில் நாலாம்;
 ருகரத்து ஈற்றைக் கொம்பென வளைக்கில்
 ஐந்தாம்; தகரத்து ஈற்றைக் குறைத்துஒரு
 ரகரம் பொருத்திடில் ஆறாம்; எகரமும்
 அகரமும் ஏழு, எட்டு ஆகும்: ககரத்து
 ஈறுதொட்டு ஒரு சிறுகொம்பென வளைக்கில்
 ஒன்பது ஆகும்; ஐகா ரத்தின்