| 42. | அகரத்து ஈறுதொட்டு அதன்இடம் சுழித்து |
| | வலங்கொணர்ந்து அதனொடுநாழிஎன் எழுத்தைப் |
| | பொருத்தில் ஆகஎன்று ஆயிற்று என்றும், |
| | றகரத் தலைபுணர் இகரம்இக்கு என்றும், |
| | ககரத் தகரத்து ஈற்றினை இரட்டித்து |
| | ஒற்றெழுத்து அவற்றொடு கூடிற்று என்றும், |
| | ஐகா ரத்தின்முற் பகுதிமட் டெழுதி, |
| | ஈறு தொட்டு வலத்துஓர் கிடைவரை |
| | இழுக்கில்நெல் என்றும், சகரத்து ஈற்றுஒரு |
| | லிகரம் கூட்டில் சங்கிலி என்றும் |
| | இவ்வாறு உளகூட் டெழுத்துஎலாம் மொழியில் |
| | அடங்கா; ஆதலின் அறைகிலம்; ஆயினும் |
| | கூடும்நாண் மிகலாற், குலவுஅலகு உறுப்பூடு |
| | அயல்போன்று உளசில அகற்றிடற்கு அரியன |
| | அவ்வியல்பு உரைக்குதும் அறிந்த வாறே. |