அறுவகையிலக்கணம்055
என்று ஆகும். ககரம், தகரம் ஆகிய ஈரெழுத்துகளின் கடைசிப் பகுதியை மட்டும் இருமுறை எழுதினால் அது தன் இன மெய் கூடிய க்க, த்த, என்ற கூட்டெழுத்துகளாம். ஐகாரத்தின் மேற்பாதியை மட்டும் வரைந்து அதன் ஈற்றில் ஓர் படுக்கைக் கோடு கிழித்தால் நெல் எனப்படும். சகரத்தோடு தொடர்ந்து லிகரத்தை எழுதினால் அது சங்கிலி ஆகும். இவ்வாறு பற்பல கூட்டழுத்துகள் உள்ளன. அவை சொல்லின் முடிவுறா. எனவே அனைத்தும் சொன்னோமில்லை. என்றாலும் கூறாமல் விடவும் நாண உணர்ச்சி இடந்தராததால் தள்ளிவிடமுடியாதனவாக அலகுகளின் உறுப்புகளுடன் வேறானவை போன்று விளங்கும் சிலவற்றை யாமறிந்த வண்ணம் கூறுவாம் என்றவாறு.
இவர் இரண்டு எழுத்துகள் தம் ஒலி மாறாமல் கூடுவதே கூட்டெழுத்து எனக் கொள்ளவில்லை. ஒரு சொல்லாகப்படிக்கப்பெறும் வரிவடிவங்கள் அனைத்தையும் கூட்டெழுத்து என்கிறார். அதனால்தான் க்க, த்த என்பனவற்றோடு நெல், சங்கிலி போன்றனவும் இங்கு கூறப்பெற்றன. சம்யுக்தாட்சரம் இவர் சொல்லும் கூட்டெழுத்தின் ஒரு பகுதியாக மட்டும் அமைகிறது.
1951 ஆம் ஆண்டு சென்னை அரசாங்கக் கீழ்த்திசைச் சுவடி நூலகத்தால் வெளியிடப்பட்ட ஆஸ்தான கோலாஹலம் என்ற தமிழ்க் கணித நூல் வேறொரு குறியீட்டை இக்கு என வழங்குகிறது. இவர் சற்று வேறுபட்ட ஒரு வடிவத்தைக் குறிக்கிறார். இது மாவட்டத்திற்கு மாவட்டம் ஏற்படும் வேறுபாடாகலாம்.
(42)
43.ஒருமா எழுதி அதன்ஈறு பற்றிக்
 காணியின் உருவம் காட்டும்மா காணியும்
 இரண்டு மூன்று நாலெனும் இவற்றின்
 ஈற்றில் மாஇசைத்து இருமா மும்மா
 நான்மா எனலும், மூன்றின் ஈறு
 ணிகரத்து ஈறு பொருந்திடின் மூன்று
 மாகாணி எனலும், எகரத்து ஈற்றை