அறுவகையிலக்கணம்057
எழுதினால் முக்குறுணி ஆம். நெல்லின் படுக்கைக் கோட்டை நீக்கி, அங்கிருந்து மேற்புறம் வலமாகக் கொணர்ந்து இடப்புறம் சுழித்தால் கோட்டை ஆகும். இவைகளேயன்றிக் கீழ் அரைக்காலொடு (கீழ் என்ற குறியையிட்டு நடு அலகுக்கு உரிய அரைக்காலை வரைதல் மூவுழக்கு போன்ற மேல் அலகுக்குரிய மூன்றுடன் அவ்வலகுக்கு உரிய உழக்கைச் சேர்த்து வரைதல் போன்ற சில பொருந்தாத கூட்டெழுத்துகளும் வழக்கில் உள்ளன என்றவாறு.
இந்நூற்பாவில் கீழ்க்குறியோடு நடு அலகுக்கு உரிய அரைக்காலைச் சேர்த்து எழுதிக் கீழ் அரைக்கால் (1/2560) என்பதைப் பொருந்தாக் கூட்டு என்பதற்குக் காரணம் 37 ஆம் சூத்திரத்தில் கீழ் அரைக்காலுக்குத் தெளிவான வேறு வடிவம் காட்டப் பட்டிருப்பதே போலும். இவ்வாறே மூன்று உழக்கு என்னும் குறியீடுகளை இணைத்து மூவுழக்காக்கலும் பொருந்தாது என்கிறார். ஏன்எனில் உழக்கின் குறியீடு ளுகரம். நடு அலகில் ளுகரம் முக்கால் ஆகும். எனவே மூவுழக்கு என்பதை ஙளு என எழுதினால் அது மூன்றேமுக்கால் எனவும் படிக்கப்படலாம். ஒரே குறியீடு இருவகையாக மயங்கவைத்தலின் மூவுழக்கிற்கு இதை நீக்கினார்.
பொதுவாக இவ்வாசிரியர் கீழ், நடு அலகுகட்குத் தனித் தனிக் குறியீடுகளை வேண்டுகிறார். ஆனால் அவ்வாறு தனித் தனியே கொள்ளாது நடுவலகுக் குறிகளையே கீழ் என்னும் குறியிட்டுப் பயன்படுத்தும் வழக்கத்தையும் காண்கிறோம். இப்பழக்கத்தை இவர் விரும்பவில்லை எனத் தோன்றுகிறது.
(43)
44.“இகரத்து ஈற்றுஒரு லகரம் கூட்டி,
  அதன்ஈறு தொட்டுக் கீழ்ஓர் வரைஇழுத்து,
  இடம்சுழித்து, அவ்வரைக் குறுக்கா வலங்கொடு
  முக்காணி ஈறு பொருந்தக் காட்டிடல்
  இலக்கம் ஆகும்என்று இசைவுறல் இனிது” எனல்
  போலும் பல்பொறி புதியன வரினும்
  அலகுணர் மாக்கள் அகற்றார் அன்றே.