துமே ஒன்றை உணர்த்துவதற்காக ஏற்பட்ட குறியீடுகளே ஆகும் என்றவாறு. | அகர ஒலியின் வரிவடிவமாகத் தமிழில் அ என்னும் குறியீட்டைப் பயன்படுத்துகிறோம். இதே அகரத்தின் வரிவடிவமாகத் தெலுங்கு, கன்னடம், மலையாளம், தேவநாகரி, கிரந்தம் ஆகியவற்றுள் வேறுவேறு குறியீடுகளை வழங்குகின்றனர். ஒவ்வொரு மொழியில் ஒவ்வொரு விதமாக எழுதப்படும் வரி வடிவங்கள் யாவும் ஓர் அகரவொலியைக் குறிக்க எழுந்தனவே. இதனால் எல்லா மொழிகளிலுமுள்ள எல்லா எழுத்துகளும் குறிப்பெழுத்துகளே என்றார். | இக் கொள்கையினால் தான் போலும் இவர் கூட்டெழுத்து குறிப்பெழுத்து என்பனவற்றிற்குத் தெளிவான வரையறை கூறவில்லை. (47) | 48. | அகர ஒகரம் ஆதிய சிலபொறி | | ஈறு தொட்டுச் சகரத்து ஈறுஎன | | எழுதி ஆஓ முதலியன எனலும், | | ரகரத்து ஈற்றினை ஏகா ரத்துஈறு | | ஆமெனக் காட்டலும், தகர றகரம் | | ஆதியின் ஈறுஇடம் சாய்த்தலும், அவற்றின் | | தலைமிசை ஒன்றாக் கிடைவரை காட்டலும், | | இகரத்து ஈற்றினைச் சுழித்துஈ எனலும், | | அகரத்து ஆதிதொட்டு இடம்கீழ்க் கொணர்ந்துஅரை | | ஆகும்என்று இசைத்தலும், ககரத்து ஈற்றுஒரு | | கணபதிச் சுழியிட்டு ஆய்தம் என்கையும், | | கெகரம் கொகரம் ஆதிய தாமே | | கேகோ ஆதிய ஆம்எனக் கிளத்தலும், | | போல்வன பிறவும் புரையின வாமே. |
| அ, ஒ போன்ற சில உயிர்க் குறில்களின் கடைசியிலிருந்த சகரத்தின் ஈற்றுப் பகுதியைப் போல் வரைந்த வடிவை ஆ, ஓ எனல், ரகரத்தில் இரண்டாவது குத்துக் கோட்டின் கீழ் ஏகாரத்திற்குப் போல் சிறிய சாய்வுக்கோடு இழுத்தல், தகரம் |
|
|