இத்தவற்றைத் திருத்தியவர்களை வாழ்த்துகிறார். இம்மாற்றம் வீரமாமுனிவரால் செய்யப்பெற்றதாகத் தெரிகிறது. (49) |
|
50. | உகரம் சார்தர ஒற்றுஒலி எழலும், | | நால்வகை எழுத்தில் துணைஒலிப் புணர்ச்சியும் | | சிறார்தம் நிமித்தம் செறிந்தன வாமே. |
|
மெய்யெழுத்துகளை உகரத்தோடு சேர்த்துச் சொல்லலும், உயிர், மெய், உயிர்மெய், ஆய்தம் என்னும் நான்குவகையான எழுத்துகளுடனும் எழுத்துச் சாரியைகளைக் கூட்டி உரைத்தலும் சிறுவர்களுக்குப் போதிப்பதற்காக ஏற்பட்ட வழக்கமாம் என்றவாறு. |
க், ங், ச் போன்ற மெய்யெழுத்துகளைச் சிறு குழந்தைகள் இக்கு, இங்ஙு, இச்சு என்றே கூறுவர். அக்குழவிகளுக்கு எழுத்து அறிவிக்கும் பெற்றோரும், ஆசிரியரும் அவர்கள் எளிதில் உணரும் பொருட்டுத் தாமும் சிலநாள் வரை அவ்வாறே உச்சரிப்பர். |
ஆனா, காவன்னா, அக்கன்னா என அவர்களுக்காகவே துணை ஒலிகள் புணர்க்கப்படுகின்றன. அவர்கள் வளரவளர மெய்யெழுத்தின் உகரமும், மற்ற எழுத்தின் துணை ஒலியும் தாமே நீங்கி விடும். (50) |
51. | உகரத்து உறுசுழி நீண்டு காட்டல் | | ஆதிய அணிசில அறியும் குறிப்பே |
|
உகரத்தை எழுதுங்கால் அதன் சுழியைப் பெரிதாக வரைதல் போன்ற அழகுகள் சில செய்தியை அறிவிக்கும் குறிப்புகள் ஆகும் என்றவாறு. |
உகரம், நாழி, பிள்ளையார் சுழி இம்மூன்றும் ஒரே வடிவம். நாழியை விநாயகர் சுழியிலிருந்து இடம் நோக்கி எளிதில் பிரித்தறியலாம். ஆனால் உகரம் சில இடங்களில் மயங்க வைக்கும். உதாரணமாக உத்தியிடை என ஓரேடு தொடங்குவதாக வைத்துக் கொள்வோம். இதில் முதல் எழுத்து உகரமா அல்லது விநாயகர் சுழியா என மயக்கம் வரலாம். ததி என்றாலும் பொருள் உண்டே. |