இதை அவ்வரி முழுவதும் படித்தே தீர்மானிக்க வேண்டும். இவ்வாறின்றி உகரத்தை எழுதும்போதே சுழியைப் பெரியதாகப் போட்டு விட்டால் மயக்கமே வராதல்லவா? மயக்கமின்மையே இங்கு அணி ஆயிற்று. சிலர் கையெழுத்தில் அ,சு;ன,ள ¬
;த,ந;டா,பி ஆகியன ஒரே மாதிரி இருந்து மயங்க வைக்கும். இவ்வாறு குழம்பச் செய்யாமல் எழுதுவது ஓர் அழகாதலின் அணி எனப்பட்டது. (51) |
52. | உயிர்மெய் வருக்கத்து ஒன்றோடொன்று ஒப்பிட்டு | | அறைந்தமை ஒற்றுஉறழ் அதன்அதன் அகரம் | | நின்றமை பற்றிஎன்று உணர்வது நெறியே. |
|
எழுத்துகளின் வரிவடிவைச் சொல்லியபோது உயிர்மெய் எழுத்தை உவமையாக்கிக் கூறிய இடங்களில் எல்லாம் அம்மெய்யின் மீது அகரம் ஊர்ந்த உயிர்மெய் வடிவை மனதிற் கொண்டு கூறப்பட்டது என அறியப்பட வேண்டும் என்றவாறு. |
“ணவ்வே முந்திரி, டஅரைக்காணி” போன்ற இந்நூல் நூற்பாக்களுக்கு இது விளக்கமாக அமைகிறது. அங்கு ண, ட என்றவை அகரச்சாரியை பெற்ற மெய்கள் அன்று; உயிர்மெய்களேயாகும் என்கிறார். (52) |
53. | அலகுஇனத்து இம்மி ஆதிய கீழும் | | சங்கம் ஆதிய மேலும் தள்ளிடல் | | உருவிலா ஓசை யாம்என உணர்ந்தே. |
|
கீழ் அலகுகளில் இம்மி முதலிய மிகமிகச் சிறிய பின்னங்களையும் மேல் அலகுகளில் சங்கம் போன்ற மிகமிகப் பெரிய எண்களையும் அவை தமக்கெனத் தனியான வரிவடிவங்களற்ற வெறும் ஓசைகள் ஆதலின் இங்கு கூறப்படவில்லை என்றவாறு. |
இம்மி = 1/1025000; சங்கம் = கோடாகோடி 1014 (53) |
54. | ஒன்பது பத்தைத் தொண்ணூறு என்பதும் | | அத்தொகை நூற்றைத் தொள்ளா யிரமென்று | | அறைவதும் பழமை யாமெனல் வழக்கே. |
|