ஒன்பது பத்துகளின் தொகுப்பைத் தொண்ணூறு என்றும் ஒன்பது நூறுகளின் சேர்க்கையைத் தொள்ளாயிரம் என்றும் கூறுதல் தொன்றுதொட்ட மரபாகும் என்றவாறு. |
எண்களைப் பற்றிய வரிவடிவங்கள் முன்னே கூறப்பட்டன. அத்தொடர்பு பற்றியே இந்நூற்பாவை இங்கு வைத்தார் போலும். இது எழுத்திலக்கணத்தோடு தொடர்பற்ற செய்தியாகும். (54) |
55. | ஆயிரம் சூகாரம் ஆதல் போலும் | | திரிவுவந்து ஒன்றிலும் திருத்திடல் அரிதே. |
|
சுகரத்து ஈற்றைச் சிறிது இடமேலாய் வளைத்துச் சூவென நிறுவ வேண்டிய ஆயிரத்தின் வரிவடிவை (இந்நூல் 39) வாளா சூ என எழுதுதல் போன்ற மாற்றங்கள் காலப்போக்கில் ஏற்பட்டுவிடினும் அவற்றை மாற்ற முடியாது என்றவாறு. |
இதனால் பொதுமக்களால் பரவலாக வழங்கப்படும் பொழுது மொழியின் வரிவடிவத்தில் மாற்றங்கள் நேர்வது இயல்பே என்றும் அவை தவிர்க்க முடியாதனவும் ஆகும் என்றும் கூறப்பட்டன. (55) |
56. | சுழிஇலா ஒற்றும், சொல்லிய நிலையில் | | பிறழ்குறிப் பொறியும் பெரிதுடைத்து உலகு; அவை | | கண்டுஉணர்ந்து கோடல் கற்றோர் கடனே. |
|
மெய்யெழுத்துகளுக்கு மேல் புள்ளியில்லாமல் எழுதுதல், இந்நூலில் முன்னால் கூறப்பட்ட வரிவடிவங்களிலிருந்து வேறுபட்ட வடிவங்களைச் சில எழுத்துகள் பெறுதல் போன்ற வித்யாசங்கள் நிரம்ப உண்டு. அவைகளை உலக வழக்கத்தைப் பார்த்து தெரிந்துகொள்ளுதல் அறிஞர்களுக்குக் கடமையாகும் என்றவாறு. |
பனையோலைகளில் எழுதும்போது மெய்யெழுத்துகளுக்கு மேற்புள்ளி வைக்க மாட்டார்கள். சுவடியைப் படிப்பவர்களே இது ஒற்று, இது உயிர்மெய் என இடம் நோக்கித் தெளிய வேண்டும். மேலும் எழுதுபவர் கைப்பழக்கத்தால் சில எழுத்து |