|
தோற்றுவாய் | எழுத்துகளின் அளவு, இயங்கும் நிலை, இனம், தெய்வம், தனி எழுத்தின் பொருள் ஆகியன இப்பிரிவில் உரைக்கப்படும். | 59. | நால்வகை எழுத்தின் நலம்திகழ் ஒலியே | | மற்றைய மூன்று வகைஎழுத்து ஒலியில் | | சிற்சில புணர்ந்து நின்றசீர் தெரிவீர்; | | இந்நிலை இயல்பையும் இதயக் கண்கொடு | | நுண்ணிதின் நோக்கிடல் நும்கடன் ஆமே. |
| (உயிர், ஆய்தம், மெய், உயிர்மெய் என்ற) நால்வகை எழுத்துகளின் ஓசையே (அலகு, கூட்டு, குறிப்பு என்ற) மற்ற மூவகை எழுத்துகளின் ஒலியில் சில சேர்ந்து விளங்குவதை அறிவீர்கள். (அவ்வறிவு பெற்ற நீங்கள்) இங்கே கூறப்புகுந்த நிலை இயல்பையும் உள்ளமாகிய கண்களைக் கொண்டு நுட்பமாக ஆராய வேண்டுவது உங்கள் கடமையாகும் என்றவாறு. | நால்வகை எழுத்தின் ஒலி ‘நலந்திகழ் ஒலி’ எனச் சிறப்பிக்கப்பட்டதாலும், மற்றைய என்ற சொல் மொழிமாற்றுப் பொருளில் பயன்படுத்தப்பட்டதாலும் ஏனைய மூன்றுவித எழுத்துகளின் சிறப்பின்மை வலியுறுத்தப்பட்டது. இதயக்கண் என்றது ஈண்டு அறிவை நோக்கி நின்றது. அன்றியும் விருப்பத்தோடு நுட்பமாக ஆராய்ந்து எனினும் ஆம். | நிலை இயல்பின் இத்தலைச் சூத்திரத்தால் மேல்வரும் எழுத்திலக்கணப் பகுதிகளிலெல்லாம் உயிர் முதலிய நான்கெழுத்துகளுக்கே சிறப்பாக இலக்கணம் உரைக்கப்படும் என்பதைப் பெற வைத்தார். (59) | 1. ஒலிநிலை | 60. | அகரமும் இகரமும் உகரமும் எகரமும் | | ஒகரமும் றில்; இவை ஒவ்வோர் மாத்திரை; | | ஆ, ஈ, ஊ, ஏ, ஓஎனும் ஐந்தும் |
|
|
|