| வில்லை என்பது வெள்ளிடைமலை. நன்னூலாரும் இவரையே அடியொற்றினார்.1செய்யுளில்தான் ஓர் எழுத்தின் துல்லியமான அளவு செவ்வனே வெளிப்படும். எனவேதான் யாப்பியலார், “ஒன்று இரண்டு ஒரு மூன்று ஒன்றரை அரைகால் என்றனர் பொழுது இவை இடைநொடி அளவே”2 எனத் தெளிவாக வரையறை செய்து கொண்டனர். இது பற்றியே இந்நூலாசிரியரும் வேறொரிடத்தில், “அருந்தமிழ்ச் சந்தத்து ஐயும் ஒளவும் ஈற்றில் குறளாய், இடையினும் முதலினும் குறிலொடு ஒற்று எனவும் குலாஅய்ச், சிறிதும் நெடில் எனல் இன்றி நிகழும் அன்றே”3 என்றார். | 
	| இந்நூற்பாவுள் “நெடில்தாம் என்று இயம்புனர் சிலரே” என்றது பிறர்கோள் கூறல். | 
	| | 61. | குறிலிற் பாதி போலும் ஆய்தமும் |  |  | ஒற்றும் தனித்தனி அரைமாத் திரையே. | 
 | 
	| குற்றெழுத்தில் அரையளவு ஒலிக்கும் ஆய்தமும் மெய்யெழுத்துகளும் ஒவ்வொன்றும் அரை அரை மாத்திரை அலகு பெறும் என்றவாறு. (61) | 
| | 62. | ஒற்றொடு உயிர்கலந்து உயிர்மெய் ஆயினும் |  |  | அவைஉயிர் ஒலியளவு ஆகும்மாத் திரையே. | 
 | 
	| மெய்யெழுத்தின் மீது உயிர் ஊர்ந்து உயிர்மெய்யான காலையும் அது உயிரெழுத்துக் குரிய மாத்திரையை மட்டுமே பெறும் என்றவாறு. (62) | 
| | 63. | இவைபுணர்ந்து ஒலிக்கும் இயல்பே கூட்டின் |  |  | மற்றைய எழுத்தின் மாத்திரை தோன்றுமே. | 
 | 
| குற்றுயிர், நெட்டுயிர், ஐ, ஒள ஆகிய நடுஉயிர், ஆய்தம், ஒற்று, உயிர்மெய் ஆகிய இவ்வெழுத்துகளின் மாத்திரைகளைக் | 
|